கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் இவர்தான், அது விராட் கோலி இல்லை! இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் ஓபன் டாக்!
தற்போது ஒழுக்கம் கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கப்படுபவர் பென் ஸ்டோக்ஸ். தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், ஆடுகளத்தில் பீல்டிங்கிலும் வெளிப்படுத்தி வருகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பட்டையை கிளப்பியுள்ளார். தற்போதுவரை 2 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 360 ரன்கள் குவித்து 11 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். முன்னதாக உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலும் கூட கடைசி வரை நின்று இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்ததார் பென்ஸ்டாக்ஸ்.
இப்படி தொடர்ந்து தனது அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று வருகிறார். இந்நிலையில் தற்போதைய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் பென் ஸ்டோக்ஸ் தான் என்று முன்னாள் இங்கிலாந்து பந்துவீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்…
ஆம் இவர்தான் கிரிக்கெட்டின் சூப்பர் மேன். கிரிக்கெட் உலகில் மந்திரம் போட்டு வெற்றிகளை தேடித் தந்து கொண்டிருக்கிறார். நீங்கள் வேண்டுமானாலும் பார்க்கலாம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில்லும் சரி, 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலும் சரி .
கடந்த இரண்டு வருடமாக ஒற்றை ஆளாக நின்று இங்கிலாந்து அணிக்கு போட்டிகளை வென்று கொடுத்து வருகிறார். வேறு எந்த கிரிக்கெட் வீரரும் தற்போது இவரைப்போல் ஆடுவதில்லை. இந்த அளவிற்கு அழுத்தத்தை கொடுப்பதில்லை. இவர்தான் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார். அவர் விராட் கோலி பேட்டிங்கில் பட்டையை கிளப்பி தொடர்ந்து வரும் வேளையிலும் அவரை விட்டுவிட்டு இவரை கூறியிருப்பது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .