தன்னை கலாய்த்த சஞ்சை மாஜ்ரேக்கருக்கு அனாசய பதிலடி கொடுத்த ஸ்டோக்ஸ்!

இலங்கை – இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 3-0 என இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே துவம்சம் செய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த தொடரில் அறிமுகமான விக்கெட் கீப்பர் பென் போக்ஸ், சுழற்பந்து வீச்சாளர்கள் மொயீன் அலி, லீச் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். பென் போக்ஸ் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

BIRMINGHAM, ENGLAND – AUGUST 04: Ben Stokes of England celebrates dismissing India captain Virat Kohli during day four of the Specsavers 1st Test match between England and India at Edgbaston on August 4, 2018 in Birmingham, England. (Photo by Gareth Copley/Getty Images)

இந்த தொடரில் கடைசி டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார். இங்கிலாந்து 3-0 என தொடரை கைப்பற்றியதில் பென் ஸ்டோக்ஸிற்கும் பங்கு உண்டு என்றால் அதை மிகையாகாது.

 

ஆனால் ‘உணவு மீதான அலங்காரம்தான்’ என்று கிரிக்கெட் வர்ணனையாளரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். மஞ்ச்ரேக்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘சமையல் கலைஞர்கள் ஒன்றுகூடி கடுமையாக உழைத்து உணவு தயாரி்த்து இருக்கிறார்கள். ஆனால் உணவிற்கு மேல் அலங்காரத்திற்காக வைக்கப்படும் பொருள் பெயரை தட்டிச் சென்றுவிடும். அதேபோல் அனைத்து புகழையும் நீங்கள் பெறுகிறீர்கள். மொயீன் அலி, லீச், போக்ஸ் மோசமான கலைஞர்கள். ஸ்டோக்ஸ் அலங்கார பொருள் (Garnish)’’ என்று பதிவிட்டிருந்தார்.

இதை ஒரு பத்திரிகையாளர் பென் ஸ்டோக்ஸிற்கு சுட்டிக்காட்டிருந்தார். அதற்கு பென் ஸ்டோக்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நாங்கள் தனிப்பட்ட புகழைப் பற்றி கவலைக் கொள்வது கிடையாது. எந்தவகையான உணவாக இருந்தாலும் ‘கார்னிஷ்’ என்பது அர்த்தமற்றது. நாங்கள் வெற்றியை பற்றிதான் கவலைப்படுவோம். கிரிக்கெட் டீம் விளையாட்டு. நாங்கள் தொடரை 3-0 எனக் கைப்பற்றியுள்ளோம். சியர்ஸ் சஞ்சய்’’ என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்

 

Vignesh G:

This website uses cookies.