ஐபிஎல் தொடரில் விளையாடாததற்கு இது தான் காரணம்; பென் ஸ்டோக்ஸ் ஓபன் டாக் !!

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தான் ஏன் ஐபிஎல் தொடரில் தனது பெயரை பதிவிடவில்லை என்பது குறித்து விளக்கமாக தெரிவித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் முதன்மையானவராக பார்க்கப்படும் இங்கிலாந்து அணியை சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 2017 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர்ஜெயின் அணிக்கு முதன் முதலில் தேர்வு செய்யப்பட்டார், அந்த தொடரிலேயே (MVP)மோஸ்ட் வேளியபுள் அவார்டை பெற்று அசத்தினார், அதற்குப்பின் 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 12.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார், 2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட பென் ஸ்டோக்ஸ் 2020ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரு சதம் அடித்தும் அசத்தினார்.

2021 ஐபிஎல் தொடருக்கு முன் எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டதால் அந்த வருடத்தில் ஐபிஎல் தொடரை புறக்கணித்தார், மேலும் அந்த ஆண்டு பென் ஸ்டோக்ஸின் தந்தை இறந்து விட்டதால் மனரீதியாக மிகவும் கவலையடைந்த பென் ஸ்டோக்ஸ் தற்காலியமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2021-22 நடைபெற்ற ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்ஸ் மிக மோசமாக விளையாடினார், இதனால் இங்கிலாந்து அணி 4-0 என தோல்வி அடைவதற்கு காரணமாக திகழ்நதார், இதனைத் தொடர்ந்து 2022 ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்து விட்டார். ஆனால் ஏன் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வில்லை என்று எந்த ஒரு காரணத்தையும் இதுவரை தெரிவிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய பென் ஸ்டோக்ஸ் 2022 ஐபிஎல் தொடரில் ஏன் தனது பெயரை பதிவிடவில்லை என்பது குறித்து விவரித்துள்ளார்.

அதில்“டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு தற்போது என்னுடைய திறமை தேவை இதன் காரணமாக நான் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன், தற்பொழுது பணத்திற்காக ஐபிஎல் போட்டியில் விளையாடி விட்டேன் என்றால் அது என்னுடைய நாட்டிற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது போல் ஆகிவிடும். இது பணத்தை பத்தியது கிடையாது,அப்படி செய்தால் அது சரியான அணுகுமுறையும் கிடையாது தற்பொழுது என்னுடைய ஒரே குறிக்கோள் எல்லாம் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது மட்டுமே” என்று பென் ஸ்டோக்ஸ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.