அடுத்த டெஸ்ட் தொடருக்கு புதிய கேப்டன்; கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு! கொந்தளிப்பில் ரசிகர்கள்
விண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வாரியத்தின் இந்த திடீர் முடிவிற்கு ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.
கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் கரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்து வருவதால், இங்கிலாந்து வீரர்கள் ஜூன் மாதம் துவக்கத்திலிருந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கிற்கு பிறகு நடக்கும் முதல் சர்வதேச போட்டியாக இங்கிலாந்து மற்றும் விண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வருகிற ஜூலை எட்டாம் தேதி துவங்கவிருக்கிறது. இதற்கான இரு அணி வீரர்களும் இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதல் மற்றும் பரிசோதனைகள் முடிவடைந்த பிறகு, இயல்பான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்து வரும் ஜோ ரூட் முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம் அதன் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஏனெனில், அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதால் மனைவியுடன் இருக்கவேண்டுமென வாரியத்திடம் தெரிவித்திருக்கிறார்.
டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்து வரும் பென் ஸ்டோக்ஸ் முதல் போட்டியில் கேப்டனாக நியமிக்கப்படலாம் என வாரியத்தில் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் மீது ரசிகர்களுக்கு பல விமர்சனங்கள் இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த சூழலில் அவரை அணியின் கேப்டனாக நியமித்தால் எவ்வாறு வழி நடத்திச் செல்வார் என விமர்சனம் செய்கின்றனர். சமூக வலைதளங்களிலும் பென் ஸ்டோக்ஸ் மீது கடும் சாடல் இருந்துவருகிறது.
இதற்கிடையில், கேப்டனாக நியமிக்க படுவது குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார் பென் ஸ்டோக்ஸ். அவர் கூறுகையில், “நான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுத்த பின்னர், என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இந்த இடத்திலிருந்து என்னை நான் எப்படி நிர்வகிக்கப் போகிறேன் என்று தீர்மானித்தேன். தற்போது நான் இருக்கும் இடத்திற்குக் கடின உழைப்பு மற்றும் முனைப்பின் மூலமே வந்தேன் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.