இங்கிலாந்து அணியில் இருந்து விலகும் மிக முக்கிய வீரர்; கவலையில் ரசிகர்கள் !!

இங்கிலாந்து அணியில் இருந்து விலகும் மிக முக்கிய வீரர்; கவலையில் ரசிகர்கள்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தின் அணியின் முக்கிய வீரரான பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தநிலையில், அடுத்த இரண்டு போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அந்த அணியின் மிக முக்கிய வீரரான பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் தனிப்பட்ட காரணத்தின் காரணமாக உடனடியாக நியூசிலாந்து செல்ல உள்ளதால் அவர் அடுத்த இரண்டு போட்டியில் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அறிவித்துள்ளது. இது ஸ்டோக்ஸின் தனிப்பட்ட விசயம் என்பதால் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து செல்வதற்கான காரணத்தை கூற முடியாது என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த பென் ஸ்டோக்ஸ், எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த சில மார்ச் மாதத்தின் போது இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது பென் ஸ்டோக்ஸின் தந்தை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் நியூசிலாந்தில் இருந்து வருகிறார். பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் பிறந்து இங்கிலாந்தில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.