இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஆகயிருக்கும் பென் ஸ்டோக்ஸ் தற்போது இருக்கும் கிரிக்கெட் விளையாட்டில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் ஆக இருக்கிறார். சொல்லப்போனால் அவர் தான் மிகவும் சிறந்த ஆல்ரவுண்டர்
ஜேசன் ஹோல்டர் ரவிந்திர ஜடேஜா என பலர் இருக்கும் வேளையில் அவர்களை விட எல்லாம் பட்டையைக் கிளப்பி வருகிறார் பென் ஸ்டோக்ஸ். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். கேப்டனாக செயல்பட்டு முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று இருந்தாலும்.
அவரது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமையை குறைந்தபாடில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியவர் மொத்தம் 99 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இந்த போட்டி முடிவடைந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆல்ரவுண்டர் இடத்தில் முதலிடத்திற்கு முன்னேறினார்.
இந்நிலையில் இரண்டாவது போட்டி கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியிலும் அபாரமாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 256 ரன்களும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் தரவரிசை ஆல்ரவுண்டர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
,
இந்த பட்டியலில் ஜேசன் ஹோல்டர் இரண்டாவது இடத்திலும், ரவிந்திர ஜடேஜா மூன்றாவது இடத்திலும், மிட்செல் ஸ்டார்க், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து டிக்ளேர் செய்ய, அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
182 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 129 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 312 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் தடுமாறினர். அந்த அணியின் 8 வீரர்கள் ஒற்றை இலக்கில் வெளியேற, 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமன் செய்யப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.