இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தால் அதில் ஒரு போட்டியை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மார்ச் மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது
.தர்மசாலாவில் நடைபெற இருந்த முதல் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் கரோனா வைரஸ் காரணமாக லக்னம் மற்றும் கொல்கத்தா ஆகிய மைதானங்களில் நடைபெற இருந்த போட்டிகள் கைவிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்த கரோனா வைரஸ் காரணமாக பல மாநில கிரிக்கெட் சங்க நிதி ஆதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த இரண்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் உத்தரபிரதேச கிரிக்கெட் வாரியமும் மேற்கு வங்க கிரிக்கெட் வாரியமும் ஏற்பாடு செய்த செலவுகளுக்கு தற்போது ஆதாரம் கோரியுள்ளது . இதற்காக இதனை ஈடு செய்யும் வகையில் அடுத்த வருடம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் போது அதில் ஒரு போட்டியை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மேற்கு வங்க கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது.
மேலும் இந்த ஒரு போட்டியின் மூலம் கிடைக்கும் வருமானத்தை உத்தரப்பிரதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் மேற்கு கிரிக்கெட் வாரியம் ஆகிய இரண்டும் பகிர்ந்து கொண்டு இந்த இழப்பை ஈடு செய்து கொள்கிறோம் எனவும் வேண்டுகோள் விடுத்து இருக்கின்றன.