மலிங்கா, தோனி இருவரில் யார் பெஸ்ட்? ஓப்பனாக பேசிய நியுசி வீரர்!

ஐபிஎல் போட்டியின் முடிவு சிறந்த பினிஷர் சிறந்த பந்து வீச்சாளரை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொறுத்துதான் அமையும் என ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் பரபரப்பானதாக காணப்படும். ஐபிஎல் போட்டியில் முக்கிய காரணியாக அமைவது சிறந்த பினிஷர் சிறந்த டெத் பவுலரை எப்படி கையாள்கிறார் என்பதுதான்.

Chennai: CSK Skipper MS Dhoni during the practice session, at MA Chidambaram Stadium in Chennai, Thursday, March 12, 2020. The spread of coronavirus has cast a shadow with Sports Ministry planning to hold IPL matches in closed doors as foreign players were ruled out of the game till April 15 following government-imposed travel restrictions. (PTI Photo)(PTI12-03-2020_000244B)

இதில் மும்பை இந்தியன்ஸ் மலிங்காவைவிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி சிறந்தவர் என ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ள நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்காட் ஸ்டைரிஸ் இதுகுறித்து கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டியில் முக்கியம்சம் சிறந்த பினிஷர் எப்படி சிறந்த டெத் பந்து வீச்சாளரை எதிர்கொள்கிறார் என்பதுதான். எம்எஸ் டோனி – மலிங்கா இடையிலான போட்டியில் மலிங்காவை விட எம்எஸ் டோனிதான் சிறந்தவர்.

சிஎஸ்கே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை நாக்அவுட் சுற்றை தவறவிட்டது கிடையாது.

Chasing a below-par total of 126 in Pallekele, New Zealand got off to a steady start, picking up 12 runs from Akila Dananjaya’s 1st over. However, Lasith Malinga, in his second over, pegged them back by picking up four wickets while bowling a maiden over.

அவர்கள் நாக்அவுட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றுள்ளனர். சிஎஸ்கே இந்திய அணிக்கான புதுமுக வீரர்களை தயார் செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் இந்திய வீரர்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் தொடர்ச்சியாக வீரர்களை உருவாக்குவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

மும்பை இந்தியன்ஸ் நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதில் மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்துள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.