அடப்பாவமே… மிக சிறப்பாக விளையாடிய போதிலும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாத பாவப்பட்ட 11 வீரர்கள் !!

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த மாதம் 9ம் தேதி துவங்கியது.

மொத்தம் 60 போட்டிகள் இந்த தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில், கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடிய இளம் வீரர்கள் சிலர் இந்த தொடர் குறித்தான தங்களது அனுபவங்களை பகிர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அதே போல் முன்னாள் வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் தங்களை கவர்ந்த வீரர்கள் குறித்தும், ஒவ்வொரு அணியின் செயல்பாடுகள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்ட பல வீரர்கள் இந்திய அணிக்காக இது வரை ஒரு போட்டியில் கூட பங்கு பெறவில்லை அதிலும் குறிப்பாக இந்திய அணிக்காக விளையாட மிகச்சிறந்த 11 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.

கொல்கத்தா அணியின் முன்னணி நட்சத்திர வீரர்களான நித்திஷ் ராணா மற்றும் ராகுல் திரிபாதி கொல்கத்தா அணிக்காக மிக சிறப்பாக செயல்பட்டு பலமுறை கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தனர். ஆனால் இந்த இரு வீரர்களும் இதுவரை ஒரு முறை கூட இந்திய அணிக்காக களம் இறங்கவில்லை.

வரும் காலங்களில் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இருவரும் திகள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதனைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டராக வலம் வந்து கொண்டிருக்கும் மனான் வோரா இன்னும் ஒரு முறை கூட இந்திய அணிக்காக களம் இறங்கவில்லை .

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் லெக் ஸ்பின்னரான ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படெல் மிக சிறப்பாக ஐபிஎல் போட்டிகளில் செயல்பட்டாலும் இதுவரை ஒரு போட்டியில் கூட இந்திய அணிக்காக களம் இறங்கவில்லை, இவர்கள் இருவரும் நிச்சயமாக இந்திய அணிக்காக களம் இறங்குவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக ஆரம்ப காலத்தில் இருந்த மாயப் பந்துவீச்சாளர் என்று அழைக்கப்படும் சதாப் ஜகாடி 2019 ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இவர் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடினாலும் ஒருமுறைகூட இந்திய அணிக்காக களம் இறங்க வில்லை என்பது வருத்தமளிக்கிறது.

மிக சிறப்பாக கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய சித்தார்த் திரிவேதி மிக சிறப்பாக பந்துவீசி அனைத்து கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றார் ஆனால் 2013, ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இவர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதில் இருந்து தடை செய்யப்பட்ட இதனை தொடர்ந்து இவரின் கிரிக்கெட் அத்தியாயமே முடிவுக்கு வந்தது.

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த பிரவீன் தாம்பே மிகச்சிறப்பான சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தார் மேலும் நான்கு சீசன்களில் மட்டும் விளையாடிய இவரின் எக்கனாமிக் கிரேட் 8 க்கும் குறைவாகவே இருந்தது, ஆனால் இவர் ஒருமுறை கூட இந்திய அணிக்காக விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2008 முதல் 2017 வரை ஐபிஎல் போட்டிகளில் மிகச்சிறந்த வீரராக வலம் வந்த ராஜட் பாட்டிய 95 போட்டிகளில் பங்கேற்று 73 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் மேலும் 371 ரன்கள் எடுத்த இவர் அதன்பிறகு எந்த ஒரு போட்டியிலும் பங்கு கொள்ளவில்லை மேலும் அவர் விளையாடிய காலங்களில் ஒரு முறை கூட இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பராக ஆரம்ப காலத்தில் இருந்த மன்விந்தர் பிஸ்லா பல போட்டிகளில் பங்கெடுத்து இருந்தாலும் இதுவரை ஒரு முறை கூட இந்திய அணிக்காக களம் இறங்கவில்லை,

ராகுல் திரிபாதி, நித்திஷ் ராணா, மனான் வோரா, மன்விந்தர் பிஸ்லா(wk), தீபக் ஹூடா, ஷதாப் ஜகாடி, ராஜத் பாடியா(c), பிரவின் தாம்பே,சித்தார்த் திரிவேதி, ஹர்ஷல் படேல், ஸ்ரேயஸ் கோபால்.

Mohamed:

This website uses cookies.