எங்களைக் கண்டால் அனைவருக்கும் பயம்! மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் பேச்சு!

எங்களைக் கண்டால் அனைவருக்கும் பயம்! மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் பேச்சு!

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த பல வருடங்களாக இளம் வீரர்களை வைத்து உருவாக்கி, இந்த வருடம் பெரும் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். 2013ஆம் ஆண்டு ஜஸ்பிரித் பும்ரா அந்த அணியில் முதன்முதலாக விளையாட வைக்கப்பட்டார். அதன் பின்னர் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடித்து தற்போது உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார்.

அதேபோல ஹர்திக் பாண்டியா அவரது, அண்ணன் போன்ற பல இளம் வீரர்கள் அந்த அணியால் உருவாக்கப்பட்டனர். அந்த உருவாக்கப்பட்ட அனைத்து வீரர்களும் இந்த வருடம் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை அணியை வெற்றிபெற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் கொல்கத்தா அணியில் இருந்து வாங்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், குஜராத்தில் இருந்து வாங்கப்பட்ட இஷன் கிஷன் ஆகிய அனைவருமே சரிக்கு சமமாக சர்வதேச வீரர்கள் போல ஆடி எதிரணிகளை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தால் வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இருவருமே எதிரணியை தங்களது துல்லியமான வேகம் மற்றும் நிலைத்தன்மை மூலம் நிலைகுலைய வைக்கின்றனர். இந்நிலையில் மும்பை அணி குறித்து பேசிக்யுள்ள அந்த அணியின் பந்துவீச்சு  பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறியதாவது…

இந்த ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளை விட எங்களது அணியில் சிறந்த பேட்டிங் சிறந்த பந்துவீச்சு ஆகிய அனைத்தும் இருக்கிறது. அப்படி உள்ள ஒரே அணி இந்த வருடம் எங்களது அணிதான். எந்த ஒரு அணியும் எங்களது அணியை எதிர்த்து அதை விரும்புவதில்லை. ஏனெனில் நாங்கள் அந்த நாளில் நன்றாக விளையாடினால் எதிரணியின் பாடு திண்டாட்டம் தான்

ப்ளே ஆப் போன்ற நெருக்கமான போட்டிகளில் எப்படி வெற்றி பெறுவது என்று எங்களது வீரர்கள் அனைவருக்கும் தெரியும். இதுதான் எங்கள் அதிருப்தி இதன் காரணமாகத்தான் அனைவரும் எங்களை பார்த்து பயம் கொள்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் ஷேன் பாண்ட்.

Prabhu Soundar:

This website uses cookies.