வீடியோ: தோனியே மிரண்டுபோகும் அளவிற்கு கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர்! அதுவும் ஒற்றை கையில்.. இணையத்தில் குவியும் பாராட்டு!
திடீரென வந்த கேட்சை நொடிப்பொழுதும் தயங்காமல் ஒற்றைக்கையால் பிடித்த விக்கெட் கீப்பரின் விடியோ பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இவருக்கு பாராட்டும் குவிகின்றன.
நியூசிலாந்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் வெலிங்டன் பையர்பட்ஸ் மற்றும் ஆக்லாந்து ஏசஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஏசஸ் அணி 179 ரன்களுக்கு சுருண்டது.
அடுத்ததாக பேட்டிங்கை செய்ய வந்த பையர்பட்ஸ் அணி 360 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 181 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது இன்னிங்சில் ஏசஸ் அணி 111 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
பையர்பட்ஸ் அணியின் முதல் இன்னிங்ஸின்போது, சுழற்பந்துவீச்சாளர் வீசிய பந்தை பேட்ஸ்மேன் தட்டிவிட முயற்சித்தார். அப்போது சற்றும் யோசிக்காமல் ஒற்றைக்கையால் கேட்ச் பிடித்து அசத்தினார் ஆக்லாந்து அணி வீரர் பென் ஹாரனே. இதன் வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இவருக்கு பாராட்டும் குவிகின்றன.
வீடியோ:
ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டி:
ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் சவுராஷ்டிரா – பெங்கால் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா 425 ரன்கள் குவித்தது.
3-வது நாள் ஆட்ட முடிவில் பெங்கால் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் அடித்திருந்தது. சட்டர்ஜீ 47 ரன்களுடனம், சகா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சட்டர்ஜீ, சகா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சட்டர்ஜீ அரைசதம் அடித்ததை தொடர்ந்து சகாவும் அரைசதம் அடித்தார். சட்டர்ஜீ 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தது.
அடுத்து மஜும்தார் களம் இறங்கினார். சகா 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின வந்த ஷபாஸ் அகமது 16 ரன்னில் வெளியேறினார். இதனால் பெங்கால் அணி 263 ரன்கள் எடுப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்தது.
7-வது விக்கெட்டுக்கு மஜும்தார் உடன் நந்தி ஜோடி சேர்ந்தார். மஜும்தார் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்த ஜோடி இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை தாக்குப்பிடித்து விளையாடியது. பெங்கால் அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்துள்ளது.