”இறுதி கட்டங்க ளில் அவர் பெரிய ஷாட்டை அடிக்க தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, ரன் அவுட் நடந்துவிட்டது.”
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், தோனி களத்தில் இருக்கும் வரை அதிக நம்பிக்கையுடன் இருந்தோம் என்று பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண். உலகக் கோப்பைத் தொடர் முடிந்து இந்தியா திரும்பி யுள்ள அவர், ’தி இந்து’ நாளிதழுக்குப் பேசியுள்ளார்.
அவர் அதில், ’’அரையிறுதிக்கு முன்புவரை இந்திய அணி வலுவானதாக இருந்தது. நியூசிலாந்து அணியுடனான அரையிறுதிப் போட்டி மறுநாளுக்குத் தள்ளிப் போனதால் சிக்கல் ஆனது. ஏனென்றால் மறுநாள் பிட்ச்-சின் தன்மை மாறிவிட்டது. தோனி யை விமர்சிப்பது பற்றி கேட்கிறீர்கள். அவரை விமர்சிப்பது நியாயமானதல்ல. அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு அதிகப் பங்களிப் பை செய்திருக்கிறார். அவர் ஜாம்பவான். பல சந்தர்ப்பங்களில் அவர், கேப்டன் விராத் கோலிக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.
அரையிறுதிப் போட்டியில், தோனி களத்தில் இருந்த வரை, வெற்றி பெற்றுவிடுவோம் என்று நம்பினோம். இறுதி கட்டங்க ளில் அவர் பெரிய ஷாட்டை அடிக்க தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, ரன் அவுட் நடந்துவிட்டது.
என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான தோனி உலகக் கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியுடன் தோற்று வெளியேறிய போது, தோனி ஓய்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. தோனி ஓய்வு பெறவில்லை என்றாலும், அடுத்து வரும் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தகவல்கள் வலம் வருகின்றன.
இனிமேல் இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் தோனி முதன்மையாக விக்கெட் கீப்பராக செல்லமாட்டார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் அணியில் தோனி இடம்பெறுவார். ரிஷப் பண்ட்க்கு தோனி வெளியில் இருந்து ஆலோசனை வழங்குவார் என்று செய்திகள் வலம் வருகின்றன.
தோனி 2020 T-20 உலகக்கோப்பை வரை விளையாடவேண்டும் என்று அவரது ரசிகர்களும், தற்போதைய நிலையிலேயே ஓய்வு பெற வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தோனி ஓய்வு பெறுவதையே அவரின் பெற்றோர் விரும்புவதாக தோனியின் இளம் வயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி கூறியுள்ளார்.