6 மாதம் என்னால வெயிட் பண்ண முடியாது ! உடனடியாக அணியில் இணைந்த புவனேஸ்வர் குமார் !

புவனேஸ்வர் குமார் அடுத்த ஆறு மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. மீண்டும் அடுத்த ஐபிஎல் தொடரில் தான் இவர் கலந்து கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தபோது தற்போது தனது உடல் தகுதியை நிரூபித்து உத்தரபிரதேசம் டி20 அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார்  இந்திய அணிக்காக பல்வேறு கடினமான சூழ்நிலைகளில் தனது பந்து வீச்சின் மூலம் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இவர்  தனது பந்துவீச்சு மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 13 வது  ஐபிஎல்  சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.

அந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில்  புவனேஸ்வர் குமாருக்கு தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் அவரால் விளையாடாமல் முடியவில்லை. 4 போட்டிகள் மட்டுமே விளையாடிய நிலையில் புவனேஸ்வர் குமார் வெளியேறி இருந்தார். இதன்காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப் பயணத் தொடரில் புவனேஸ்வர் குமார் பங்கேற்க முடியாமல் போனது. 

புவனேஸ்வர் குமார் இதனால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இவருடைய இந்த பயிற்சி அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால் புவனேஸ்வர் குமார் அடுத்த ஆறு மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. புவனேஸ்வர் குமார் வேகப்பந்து வீச்சாளர் என்பதால் உடலை வருத்தி வேலை செய்ய வேண்டும். இதன் காரணம் புவனேஸ்வர் குமார் அடுத்து ஐபிஎல் தொடரில் விளையாட முடியும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. 

தற்போது புவனேஸ்வர் குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில்  ஒன்று செய்துள்ளார். புவனேஸ்வர் குமார் சையது முஷ்டாக் அலி டி20 தொடரை குறிவைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு  தற்போது உடற்தகுதியை நிரூபித்துள்ளார். இதன் மூலம் புவனேஸ்வர் குமார் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் உத்தரபிரதேசம் t20 அணியில் இடம் பெற்று இருக்கிறார்.  இதன் பிறகு டெல்லியில் இருந்து பெங்களூர் சென்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறார் புவனேஸ்வர் குமார்.  அதுமட்டுமின்றி சையது முஷ்டாக் தொடருக்கு பின் நடைபெறவிருக்கும் இங்கிலாந்து எதிரான தொடர்களில் புவனேஸ்வர் குமார் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.