எனக்கு தொல்லை கொடுக்கும் பேட்ஸ்மேன் யார் தெரியுமா..?  புவனேஷ்வர் குமார் ஓபன் டாக் !!

எனக்கு தொல்லை கொடுக்கும் பேட்ஸ்மேன் யார் தெரியுமா..?  புவனேஷ்வர் குமார் ஓபன் டாக்

இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் புவனேஷ்வர் குமார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த பவுலராக திகழ்கிறார். சிறந்த பேட்டிங் அணியாகவே வலம்வந்து கொண்டிருந்த இந்திய அணி, புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய பவுலர்களின் வருகைக்கு பிறகு சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது.

நல்ல வேகம், சிறப்பான லெந்த் என எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டும் பவுலர் புவனேஷ்வர் குமார். இன் ஸ்விங், அவுட் ஸ்விங் ஆகிய இரண்டுமே வீசும் திறன் வாய்ந்த புவனேஷ்வர் குமாரின் இறுதி ஓவர்களை அடிப்பது அவ்வளவு எளிதல்ல. சிறந்த டெத் ஓவர் பவுலராக புவனேஷ்வர் திகழ்கிறார்.

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமாரிடம், இதுவரை அவர் பந்து வீசியதில் எந்த பேட்ஸ்மேனுக்கு வீசுவது கடினமாக இருந்தது என ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த புவனேஷ்வர் குமார், ஃபார்மில் இருக்கும் எந்த பேட்ஸ்மேனுக்கும் வீசுவது கடினம் தான். அது கடைசியாக களமிறங்கும் 11வது வீரராக இருந்தாலும் சரி.. அவர் ஃபார்மில் இருந்தால் அவருக்கு வீசுவதும் கடினம்தான் என பதிலளித்தார்.

மற்ற எந்த பவுலராக இருந்தாலும், விராட் கோலி, டிவில்லியர்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை குறிப்பிட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் புவனேஷ்வர் குமார் அவ்வாறு கூறவில்லை. கடைசியாக களமிறங்கும் வீரரையும் மதித்து புவனேஷ்வர் குமார் பந்துவீசுகிறார். யாரையும் அலட்சியப்படுத்தாமல், கடைசி பேட்ஸ்மேனையும் மதித்து பந்துவீசும் அந்த திறன் தான் புவனேஷ்வர் குமார், சிறந்த பவுலராக திகழ காரணமாக உள்ளது.

Mohamed:

This website uses cookies.