பக்கா ப்ளான்… ஆஸ்திரேலிய அணியை அலறவிட இவர் சரியான ஆளு தான்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !!

பக்கா ப்ளான்… ஆஸ்திரேலிய அணியை அலறவிட இவர் சரியான ஆளு தான்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு

சூரியகுமார் யாதவை களம் இறக்குவதற்கு பின்னாடி இந்திய அணி இப்படி ஒரு திட்டத்தை வைத்துள்ளது என்று தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜே.பி டுமினி தெரிவித்துள்ளார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை கெத்தாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தியா வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.நாளை (பிப்ரவரி 9ம் தேதி) துவங்கும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடர், மார்ச் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த கிரிக்கெட் தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 

இதனால் இரண்டு அணிகளும் இந்த தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது, குறிப்பாக இந்திய அணி அதன் சொந்த மைதானத்தில் விளையாடுவதால், எப்படியாவது தொடரை கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதில் குறிப்பாக இந்திய அணியில் ஸ்பின்னர்களை அடித்து ஆடும் ரிஷப் பன்ட் அணியில் இல்லாததால் அவருக்கு பதில் அதிரடி ஆட்டநாயகன் சூரியகுமார் யாதவை ஆடும் லெவனில் சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

லிமிடெட் ஓவர் தொடரில் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் சூரியகுமார் யாதவ், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சரியான திட்டமா என முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் விவாத பொருளாகியுள்ளது.

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜேபி டுமினி டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் இடம்பெற்றது குறித்து தன்னுடைய கருத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

அதில்,“தற்போதைய இந்திய அணியில் மிகவும் சுவாரசியமான வீரர் என்றால் அது சூரியகுமார் யாதவ் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது, டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவை கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்திய அணி இறங்கியிருக்கிறது. அப்படி ஒருவேளை இந்திய அணி சூரியகுமார் யாதவை விளையாட வைக்க வேண்டும் என்றால் இந்திய அணியின் திட்டம் டெஸ்ட் தொடரில் அதிரடியாக இருக்க வேண்டும் என்பதுதான், அப்படி இருந்தால் மட்டுமே சூர்யா குமார் யாதவை விளையாட வைக்க வேண்டும், அதற்கு நிச்சயம் சூரியகுமார் யாதவ் சிறந்த தேர்வு ”என்று ஜே.பி டுமினி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.