ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த அணி இதுதான்! ஆனால் கேப்டன் தோனி இல்லை!
இந்த வருட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை ஐபிஎல் தொடர் வெறும் மூன்று மைதானங்களில் நடந்து முடிக்கப்பட உள்ளது.இதற்கான முழு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
வழக்கம்போல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன. இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். இதில் கேப்டனாக எம்எஸ் தோனி இல்லை. மேலும் அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பெரிதாக இடமில்லை ஒரே ஒருவர் மட்டுமே இடம் பிடித்திருக்கிறார்.
இதில் தொடக்க வீரர்களாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். மூன்றாவது இடத்திற்கு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியும், நான்காவது இடத்திற்கு சன் ரைசர்ஸ் அணியின் வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
மேலும் கேன் வில்லியம்சன் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். விக்கெட் கீப்பராக டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், சுழற்பந்து வீச்சு மற்றும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
பிராட் ஹோக்கின் சிறந்த ஐபிஎல் 2020 லெவன்:
டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, விராட் கோலி, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரிஷாப் பந்த் (வி.கி), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரவீந்திர ஜடேஜா, சுனில் நரைன், யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா.