2019 ம் ஆண்டுக்கு பின்னர் ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் ஓபனிங் வீரராக விளையாடி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 12 டெஸ்ட் போட்டிகளில் 1094 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையை அளித்தார். டெஸ்ட் தொடரில் அவரது பேட்டிங் அவரேஜ் 60.77 ஆகும்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அவர் விளையாட இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா நிறைய கஷ்டப்பட போகிறார் என்று தற்பொழுது கூறியுள்ளார்.
ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆண்டர்சன் பந்து வீச்சுக்கு ரோகித்சர்மா கஷ்டப்படுவார்
ரோகித் சர்மா தற்போது டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் தற்போது அவருடைய ஆவரேஜ் 79 ஆக உள்ளது. ஆனால் அது இந்திய மண்ணில் மட்டுமே.
இந்தியாவை விட்டு வெளியே அவரது ஆவரேஜ் எடுத்து பார்க்கையில் வெறும் 27 மட்டுமே உள்ளது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து மைதானங்களில் இவருடைய ஆவரேஜ் வெறும் 24 மட்டுமே. குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் கடைசி 2 டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடினார்.
26,52, 44 மற்றும் 7 என முறையே நான்கு இன்னிங்ஸ்களில் அவர் விளையாடினார். நல்ல துவக்கம் கொடுத்து அதற்குப் பின்னர் அவர் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து விடுகிறார். குறிப்பாக இங்கிலாந்து மைதானங்களில் ந்து நன்றாக ஸ்விங் ஆகும். ஸ்டுப்ர்ட் பிரோடு மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் பந்துவீச்சுக்கு ரோகித் சர்மா சற்று கஷ்டப்படுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம் என்று பிராட் ஹாக் தற்போது கூறியுள்ளார்.
இது அவருடைய டெஸ்ட் பயணத்தை தீர்மானிக்கும்
இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா எப்படி விளையாடப் போகிறார் என்பதை பொறுத்துதான் அவருக்கு இனிவரும் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் மட்டுமின்றி வெளியூர் மைதானங்களிலும் தான் சிறந்த பேட்ஸ்மேன் என அவர் நிரூபிக்கும் நேரம் இது. ஒருவேளை இந்த டெஸ்ட் தொடரில் அவர் சொதப்பினால் நிச்சயமாக அவருக்கு வாய்ப்புகள் சற்று கேள்விக்குறியாகும் என்றும் இறுதியாகக் பிராட் ஹாக் கூறி முடித்தார்.