சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கத்தில் 7 லீக் போட்டிகளில் பங்கேற்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையில் ஆடும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி நடக்கிறது.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த பயிற்சியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ்-சின் ஆல்ரவுண்டர் பிராவோ காயமடைந் தார்.
பதினோறாவது ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது. மும்பையில் நடைபெறும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, களமிறங்கு வதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த சில நாட்களாக சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற னர். கேப்டன் தோனி, ஜடேஜா, முரளி விஜய், பிராவோ, ஹர்பஜன் சிங், வாட்சன், இம்ரான் தாஹிர் ஆகியோர் பயிற்சியில் ஈடு பட்டு வருகின்றனர். பயிற்சியாளர் பிளம்மிங், பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பயிற்சியில், ஆல்ரவுண்டர் பிராவோ பந்து வீசினார். தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஜடேஜா அடித்த பந்து, பிராவோவின் வலது கை மணிகட்டில் தாக்கியது. இதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக டிரெஸ்சிங் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ‘இது பெரிய காயம் இல்லை. சாதாரண காயம்தான்’ என்று சிஎஸ்கே தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கத்தில் 7 லீக் போட்டிகளில் பங்கேற்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையில் ஆடும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி நடக்கிறது.