ப்ரேக்கிங் நியூஸ்; கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் டேவிட் வார்னர்… ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டன் நியமனம் !!

நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடர் தோல்விகளை தொடர்ந்து, அந்த அணியின் கேப்டனான டேவிட் வார்னர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக பலம் கொண்ட அணிகளில் ஹைதராபாத் அணியும் ஒன்று என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. பேட்டிங்கில் கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், பாரிஸ்டோ என மிக முக்கிய வீரர்களை வைத்துள்ள ஹைதராபாத் அணி, பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், ரசீத் கான் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்களையும் வைத்துள்ளது.

என்னதான் தலைசிறந்த வீரர்களை அணியில் வைத்திருந்தாலும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியோ கடுமையாக சொதப்பி மட்டுமே வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டியில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள ஹைதராபாத் அணி, புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்திலேயே உள்ளது.

ஹைதராபாத் அணியின் ஒவ்வொரு தோல்வியை தொடர்ந்தும் முன்னாள் வீரர்கள் பலர் டேவிட் வார்னர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஹைதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட வேண்டும் என சேவாக் உள்பட முன்னாள் வீரர்கள் பலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஹைதராபாத் அணியும் இதே முடிவை எடுத்துள்ளது. டேவிட் வார்னர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக எஞ்சியுள்ள போட்டிகளுக்கான ஹைதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஹைதராபாத் அணி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பை இனி கேன் வில்லியம்சன் ஏற்பார். இனி எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கும் கேன் வில்லியம்சன் கேப்டனாக இருப்பார். இது நாளை நடைபெற இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து அமலுக்கு வருகிறது”. என்று தெரிவித்துள்ளது.

மேலும் “தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் – ஜானி பேர்ஸ்டோ ஜோடியும் நாளைய போட்டியில் மாற்றப்படும். கேப்டன்சி பொறுப்பை மாற்றுவது குறித்து நீண்ட ஆலோசனைக்கு பின்பு முடிவு மேற்கொள்ளப்பட்டது. டேவிட் வார்னர் காலம் காலமாக ஹைதராபாத் அணிக்கு சிறப்பான பங்கை அளித்து வருகிறார். இனி எஞ்சியிருக்கும் போட்டிகளில் வார்னர் தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவார்” எனவும் ஹைதராபாத் அணி தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Mohamed:

This website uses cookies.