கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் நியூசிலாந்தை சேர்ந்த பிரண்டன் மெக்கல்லம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக அந்த அணிக்கு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் ஷாருக் கான் வைத்துள்ள டி20 அணிகளுக்கும் இவரே தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் தெரிகிறது . கடந்த வாரத்திற்கு முன்னர் கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் உள்ள ஷாருக்கான் அணிக்கு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். மேலும் , கொல்கத்தா அணிக்கு இவர் துணை பயிற்சியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த மாதம் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதால் தற்போது முழுநேர தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரண்டன் மெக்கல்லம் ஐபிஎல் தொடர் முதன்முதலாக 2008 இல் துவங்கிய போது கொல்கத்தா அணிக்காக ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் இவர் முதல் போட்டியிலேயே அசுரத்தனமாக ஆடி 158 ரன்கள் குவித்தார். கடந்த வருட ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்கவில்லை. அதேபோல் அதே வருடம் நடந்த ஆஸ்திரேலியாவின் பிக் பாஸ் லீக் தொடரில் இருந்தும் அவர் தனது ஓய்வை அறிவித்தார்.
அதற்கு முந்தைய வருடத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு நேர அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது யூரோ டி20 தொடரில் ஆடிவரும் அவர் அதன் பின்னர் எந்த ஒரு போட்டியிலும் ஆட மாட்டார் என்று தெரிகிறது.
இதனைத் தாண்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டு வருடம் துவக்க வீரராக ஆடியுள்ளார் . இவர் ஏற்கனவே ஜாக் காலிஸ் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார் சென்ற வருடம் மோசமான செயல்பாடு காரணமாக அவர் நீக்கப்பட்டு பிரண்டன் மக்கலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.