குஜராத் லையன்ஸை தேடி வரும் சோதனை

குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வரும் நியூஸிலாந்து அதிரடி ஆட்டக்காரர் பிரண்டன் மெக்கல்லம் காயம் காரணமாக இனி வரும் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடந்து கொண்டு வருகிறது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் லயன்ஸ் அணி 3 வெற்றியும் 8 தோல்விகளும் கண்டுள்ளது.

குஜராத் அணியில் பிரண்டன் மெக்கல்லம், ஆரோன் பின்ச், சுரேஷ் ரெய்னா,தினேஷ் கார்த்திக்,ரவிந்திர ஜடேஜா,டுவைன் பிராவோ, ஜேம்ஸ் பால்க்னர் போன்ற சர்வதேச போட்டிகளில் கலக்கிய வீரர்கள் இருந்தும் தடுமாறி வருகின்றது.

இந்நிலையில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபில்-இல் இருந்து விலகுகிறார் குஜராத் லயன்ஸ் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரண்டன் மெக்கல்லம்.

ஏற்கனவே குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்களான ஜேசன் ராய், டுவைன் பிராவோ, ஆண்ட்ரிவ் டை ஆகிய வீரர்கள் கயாம் காரணமாக வெளியேறினர்.

தற்போது குஜராத் லயன்ஸ் அணியில் ஆரோன் பின்ச், டுவைன் ஸ்மித், ஜேம்ஸ் பால்க்னர் மற்றும் சிராக் சூரி ஆகிய வெளிநாட்டு வீரர்களே கையில் உள்ளனர்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.