இந்த 6 வீரர்கள பார்த்து நானே மெர்சலாகிட்டேன்; பிரையன் லாரா ஓபன் டாக் !!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தன்னை கவர்ந்த வீரர்கள் யார் யார் என்பதை முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு அணி செய்த பலவீனங்களை சுட்டி காட்டும் முன்னாள் வீரர்கள், இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் என்பதையும், தன்னை கவர்ந்த வீரர்கள் யார் என்பதையும் ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவனான பிரையன் லாராவும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தன்னை கவர்ந்த 6 வீரர்கள் யார் என்பதை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இந்நிலையில்2020க்கான ஐபிஎல் சீசனில் தன்னை கவர்ந்த ஆறு இந்திய வீரர்கள் பற்றி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவானான பிரைன் லாரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது 2020 ஐபிஎல் போட்டி தொடர் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த தொடரில் முக்கியமாக இளம் கிரிக்கெட் வீரர்கள் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அவர் ஆடிய முதல் இரண்டு போட்டி 16 சிக்சர்கள் அடித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் இவரின் ஷாட்கள் ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக உள்ளது என்று கூறினார்.

அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் பற்றி அவர் கூறியதாவது மும்பை இந்தியன்ஸ் அணியில் மிடில் ஆர்டர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு சூரியகுமார் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார் என்று அவரைப்பற்றி தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக பெங்களூரு அணியின் துவக்க வீரரான தேவ்தாத் படிக்கள் பற்றி அவர் கூறியதாவது படிக்கள் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் இவர் ஐபிஎல் டி20 தொடரில் மட்டும் பங்குபெறுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் டெஸ்ட் கிரிக்கெட் போன்ற போட்டிகளில் பங்கெடுத்தால் இவருக்கு நல்ல எதிர்காலம் அமைய கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக கேஎல் ராகுல் பிரியங்கார்க் அப்துல் சமத் ஆகிய மூவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் கே எல் ராகுல் 14 போட்டிகளில் பங்கெடுத்து 670 ரன்கள் எடுத்து இந்த சீசனுக்கான அதிகமான ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் கே எல் ராகுல் மூன்று விதமான கிரிக்கெட் தொடர்கள் விளையாடுவதற்கு மிக தகுதியானவர் என்றும் அவர் கூறினார்.

Mohamed:

This website uses cookies.