கோலி இல்லை.. இந்த பெங்களூர் வீரரிடம் நிறைய விசயங்கள் பேச வேண்டும்; ஜாம்பவான் பிரையன் லாரா சொல்கிறார் !!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா அணியின் துவக்க வீரர்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான முதல் போட்டியில் பெங்களூரு அணி திரில்லிங் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது, என்னதான் சிறப்பாக செயல்பட்டாலும் பெங்களூரு அணியின் நட்சத்திர துவக்க வீரர்கள் இல்லாதது ஒரு மிகப் பெரும் குறையாகவே இருந்தது. சமீபமாக குறைவான தொற்றால் பாதிக்கப்பட்ட தேவ்தாத் படிகள் முதல் போட்டியில் பங்கெடுக்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால் பெங்களூரு அணியின் துவக்கம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் அதேபோன்று பெங்களூரு அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வாசிங்டன் சுந்தர் சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார் பின் விராட் கோலி மேக்ஸ்வெல் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவினார்கள்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா தேவ்தாத் படிகள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் துவக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் தேவ்தாத் படிகள் ஆகிய இருவரும் களமிறங்கினர், ஆனால் அந்த வருடம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை, ஆனால் தேவ்தாத் படிகள் மிக சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். சரியாக விளையாடாத பின்சை பெங்களூர் அணி 2021 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி கழட்டி விட்டது.

இந்நிலயில்தான் 2021 ஐபிஎல் தொடரில் கொரோனா தொற்று காரணமாக தேவ்தாத் படிகள் முதல் போட்டியில் களமிறங்க முடியாமல் போனது, இதனால் பெங்களூரு அணி அவரை மிகவும் மிஸ் செய்யும்.

மேலும் பிரையன் லாரா கூறியதாவது, வலது இடது பேட்டிங் காம்பினேஷன் ஒரு அணிக்கு நிச்சயம் தேவை, தற்பொழுது தேவ்தாத் படிக்கள்ளும் சிறந்த உடர் தகுதியுடன் உள்ளார். நான் தேவ்தாத் படிக்களிடம் நிறைய விஷயங்கள் பேசினேன், நிச்சயம் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என பிரைன் லாரா தெரிவித்தார்

Mohamed:

This website uses cookies.