. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் ஒருவரார்.
இவர் தனக்கு மிகவும் பிடித்தமான வீரர் கேஎல் ராகுல் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
லிமிடெட் ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்படும் கே எல் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் 81 ரன்கள் எடுத்து அனைவரையும் வியக்க வைத்தார். மேலும் 3 ஒருநாள் போட்டித் தொடர்களில் பங்கேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 93 ரன்களை குவித்தார் இவருடைய ஆவரேஜ் 45.
ஐபிஎல் போட்டித் தொடர்களில் 670 ரன்கள் அடித்து 2020க்கான ஐபிஎல் போட்டித் தொடர்களில் அதிகமான ரன்களை எடுத்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இவருடைய ஆவரேஜ் 55.83
கே எல் ராகுல் பற்றி லாரா கூறியதாவது கே எல் ராகுல் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் அவருடைய ஒவ்வொரு சாட்டும் மிகவும் நேர்த்தியாக உள்ளது மிகவும் இக்கட்டான நிலையில் நிதானமாக செயல்பட்டு அபாரமாக தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் இவருடைய ஆட்டம் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது என்று கூறினார்.
என்னைப் பொருத்தவரையில் இவருடைய ஆட்டம் மிக சிறப்பாக உள்ளது குறிப்பாக டி20 போட்டிகளில் இவருடைய பேட்டிங் டெக்னிக் மிகவும் அபாரமாக உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் கேஎல் ராகுல் பற்றி ரிக்கி பாண்டிங் கூறியதாவது கேஎல் ராகுல் சிறப்பாக செயல்படுகிறார் இவர் டெஸ்ட் போட்டியில் மிகவும் அபாரமாக தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் இன்னிலையில் இவர் டி20 போட்டிகளில் இவ்வளவு அதிரடியாக ஆடுவது மிகவும் வியப்புக்குரிய விஷயமாக திகழ்கிறது என்று அவர் கூறினார்