எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு வீரர் இவர் தான்; அணில் கும்ப்ளே ஓபன் டாக் !!

எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு வீரர் இவர் தான்; அணில் கும்ப்ளே ஓபன் டாக்

தனக்கு கிரிக்கெட் கேரியரில் தனக்கு சவாலாக இருந்த பேட்ஸ்மேன் யார் என்பதை முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே ஓபனாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், கேப்டனுமான அனில் கும்ப்ளே இந்திய அணிக்காக ஏறத்தாழ 15 ஆண்டுகள் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கும்ப்ளே அதில் 619 விக்கெட்டுகளையும், 271 ஒருநாள் போட்டிகள் விளையாடி அதில் 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தனது நேர்த்தியான பந்துவீச்சு மூலம் இன்று வரை பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ள அனில் கும்ப்ளே, இன்று வரை இந்திய அணியின் முன்னாள் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அணியின் தலைமை பந்துவீச்சாளராகவும் பதவி வகித்த அனில் கும்ப்ளே தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்தநிலையில், சமீபத்தில் அனில் கும்ப்ளே அளித்த பேட்டி ஒன்றில், தனது கிரிக்கெட் கேரியரில் தனக்கு சவாலாக இருந்த பேட்ஸ்மேன் யார் என்பதை ஓபனாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அனில் கும்ப்ளே கூறியதாவது;

பந்துவீசுவதற்கு கடினமான பேட்ஸ்மேன்கள் நிறைய பேர் இருந்தாலும், முன்னாள் ஜாம்பவானான பிரயன் லாரா தான் அதில் முதன்மையானவர். அவருக்கு பந்துவீசுவது மிகவும் கடினம். அவரது பேட்டிங் ஸ்டைலையும், அவர் என்ன ஷாட் அடிக்க போகிறார் என்பதையும் கணிக்கவே முடியாது, ஒவ்வொரு பந்திற்கும் நான்கு வகையான ஷாட்கள் வைத்திருப்பார்” என்றார்.

Mohamed:

This website uses cookies.