Eat..Sleep.. Conquer..Repeat என்னும் பிராக் லெஸ்னரின் கோட்பாடுகளை போலவே தோனி Eat..Sleep.. Finsih Game..Repeat செய்கிறார் என அவரின் மேனேஜர் ஐசிசி கிரிக்கெட் தளத்திற்கு ஒரு ட்வீட் செய்துள்ளார். நாங்கள் செய்ததை உன்னிப்பாகவும் சரியாகவும் செய்கிறார் தோனி. அவருக்கு மேலும் புகழும் பணமும் வந்து சேர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தோனி போன்ற ஒரு வீரர், 30-40 வருடத்துக்கு ஒரு முறைதான் கிடைப்பார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. இதில் 71 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. அதே போல ஒரு நாளை தொடரையும் முதன்முறையாக வென்று சாதித்தது.
நேற்று நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் தோனி சிறப்பாக ஆடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது ஆட்டத்திறன் குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்தபோதும், அவர் தொடர்ந்து மூன்று ஆட்டங்களிலும் அரை சதம் அடித்தார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது.
இந்நிலையில் தோனி பற்றி, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனுக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில், ‘’தோனி ஓய்வு பெற்றுவிட்டால் அவருக்கு பதில் யாரை களம் இறக்குவீர்கள் என்று கேட்கிறீர்கள். அவருக்கு இணையான வீரர் யாரும் இல்லை. அவருக்கு மாற்று இல்லை. அவரைப் போன்ற வீரர்கள் 30-40 வருடத்துக்கு ஒருமுறைதான் கிடைப்பார்கள். அவர் இல்லை என்றால் அந்த இடம் வெற்றிடமாகவே இருக்கும்.
ரிஷாப் பன்ட் இருக்கிறார். ஆனால் தோனி போல் இன்னொருவர் வருவது கடினமானது. ரிஷாப்பின் ஹீரோவே தோனிதான். டெஸ்ட் தொடர் நடந்தபோது, ஒவ்வொரு நாளும் தோனியுடன் பேசிக்கொண்டே இருந்தார். அப்போது மற்ற வீரர்களை விட தோனியிடம் அதிகம் பேசிய வீரர் ரிஷாப்தான். இப்படிப்பட்ட மரியாதை முக்கியமானது. அதே போல விராத்துக்கும் தோனிக்கும் இடையிலுள்ள பரஸ்பர மரியாதையும் நம்ப முடியாததாக இருக்கிறது.
இதனால் டிரெஸ்டிங் ரூமில் எனது வேலை எளிதாகிறது. இந்திய அணிக்கு ஆட வேண்டும் என்றால் பயமில்லாமல் ஆட வேண்டும் என்பது கட்டாயம். மனதளவில் தயாராகி விட்டால் பிறகு ஏன் பயம் வேண்டும்?’’ என்றார்.