பல மாதங்கள் கழித்து இந்திய அணிக்கு திரும்பும் நட்சத்திரம்… மகிழ்ச்சியின் உச்சியில் ரசிகர்கள்!

பல மாதங்கள் கழித்து இந்திய அணியின் முன்னணி வீரர் மீண்டும் அணியில் இணைவதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது

முதல் கட்டமாக, நடந்து முடிந்த டி20 தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது.

அடுத்ததாக,  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடா் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் 15-ஆம் தேதி துவங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி 18-ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது ஒருநாள் போட்டி 22-ஆம் தேதி கட்டாக்கில் நடக்கிறது.

இந்நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டத்துக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவும் இணையவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

பும்ராவுக்கு அவரது கழுத்தின் கீழ்பகுதியிலும், கால் கணுக்கால் பகுதியிலும் காயம் இருந்தது. இதனால் அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

பும்ரா கடைசியாக, இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துபோது விளையாடினார் பும்ரா. அதன்பிறகு காயம் காரணமாக அவர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

இதனிடையே காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பும்ரா, விசாகப்பட்டினத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியில் பங்கேற்க உள்ளார் என தெரிகிறது.

பயிற்சியின்போது அவருடைய உடற்தகுதியை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருணும் பரிசோதனை செய்யவுள்ளார்கள்.

ஜனவரி மாதம் முதல் இந்திய அணி தொடர்ந்து இலங்கை, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து தொடர்களில் பங்கேற்கிறது. பும்ரா ஜனவரி மாதத்திற்குள் முழு உடற்தகுதியுடன் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.