இதுவரை எந்த இந்தியரும் செய்யாத சாதனையை செய்த ஜஸ்பிரிட் பும்ரா!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய இலங்கை அணி வீரர் குலசேகராவின் உலக சாதனையை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முறியடித்துள்ளார்.

 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஐந்து டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணியுடன் விளையாடுகிறது. இதில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மவுண்ட் மாங்கானு நகரில் நடைபெற்றது. பரபரப்பாக சென்ற அந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்தது.

LEEDS, ENGLAND – JULY 06: Jasprit Bumrah high fives Rohit Sharma of India after he gets Angelo Matthews of Sri Lanka out during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Sri Lanka and India at Headingley on July 06, 2019 in Leeds, England. (Photo by Nathan Stirk/Getty Images)

இருதரப்பு சர்வதேச டி20 போட்டிகளில், 5 போட்டிகளில் வெற்று பெற்று எதிரணி ஒயிட்வாஷ் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை இந்திய அணி தன்வசமாக்கியது.

இந்நிலையில், நேற்று நடந்த 5வது டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய உலக சாதனை படைத்தார்.

நுவன் குலசேகரா

நேற்றைய ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். 4 ஓவர்கள் வீசி வெறும் 12 ரன்களே விட்டுக்கொடுத்த பும்ரா மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பும்ரா 7 மெய்டன் ஓவர்களை வீசி சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக சர்வதேச டி20 போட்டிகளில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரா (58 போட்டிகள்) 6 ஓவர்கள் மெய்டனாக வீசியதே உலக சாதனையாக இருந்தது.வ்

Sathish Kumar:

This website uses cookies.