இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, சிறந்த பந்துவீச்சாளர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ புகழாரம் சூட்டியுள்ளார்.
உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளில் சிறந்த 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என 3 பேரின் பெயர்களை அறிவித்தார் பிரெட் லீ.
அவர்களில் பும்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
பிரெட் லீ கூறுகையில், “பும்ரா மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 49 ஒரு நாள் ஆட்டங்களில், 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது மிகப் பெரிய சாதனை. பந்துவீச்சில் யார்க்கரையும் துல்லியமாக அவர் வீசுகிறார். ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை மிச்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் ஆகிய வீரர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்’ என்றார்.
பிரெட் லீ வேகப்பந்து வீச்சுக்கு புகழ்பெற்றவர் ஆவார்.
வழக்கமான யார்கர்களைப் போலத்தான் இருக்கும், ஆனால், பேட்ஸ்மேன்களை பந்துவந்து சேரும் நேரம் குறைவாக இருக்கும். அதாவது பேட்ஸ்மேன் பேட்டை சுழற்றியபின் அவரை வந்சு சேரும். பெரும்பாலும் இதுபோன்று பந்துவீசுவதும், அதை சமாளித்து பேட் செய்வதும் மிகக் கடினம்.
இந்த ஸ்லோயார்கர்களை இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா அதிகமாக வீசக்கூடியவர்கள்.
உலகிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் பும்ரா என்று சச்சினால் புகழப்பட்டுள்ளார். பும்ராவின் பந்துவீச்சை எந்த நாட்டு அணியின் பேட்ஸ்மேனும் எளிதாக கணித்து ஆடிவிட முடியாது. வேகமாக கையில் இருந்து ரிலீஸ் ஆகும் பந்தும், ஸ்விங் ஆவதும் பேட் செய்ய மிகக்கடினமாக இருக்கும். பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரக்கூடிய ஸ்லோ யார்கர்களை வீசுவதில் பும்ரா திறமையானவர். இந்த முறை உலக அணிகளே பும்ராவின் பந்துவீச்சை எதிர்பார்க்கிறது.
கேப்டன் விராட் கோலி சூழ்நிலைமைகள் அல்ல, அழுத்தங்களை எதிர்கொள்வதுதான் முக்கியம் என்று கூற ரவிசாஸ்திரி கூறும்போது, “இந்தத் தொடரைப் பார்க்கும் போது, இது ஒரு வாய்ப்பு அவ்வளவே. இந்த அணியைப் பார்த்தோமானால் கடந்த 5 ஆண்டுகளாக பிரமாதமான கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடியுள்ளோம். ஆகவே அதே மாதிரியான சீர்மைக்கு விழைவதுதான் முக்கியமே தவிர, உலகக்கோப்பை என்பதற்காக வித்தியாசமாக ஆட வேண்டியத் தேவையில்லை.
உலகக்கோப்பை என்பது ஒரு அரங்கம், அதனை முழுதும் ரசித்து ஆட வேண்டும். களத்தில் இறங்கி உலகக்கோப்பைப் போட்டி என்பதை ரசித்து மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும். திறமைக்கு ஏற்ப ஆடினால் கோப்பை நம் பக்கம்.
இந்த உலகக்கோப்பை மிகவும் சவாலாக இருக்கும், எல்லோரும் எல்லொருடனும் மோத வேண்டியுள்ளது. 2014, 2019 ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அணிகளுக்கு இடையே இருக்கும் இடைவெளி நெருக்கமாக உள்ளன. 2014-ல் ஆப்கான் அணி எப்படி இருந்தது, இப்போது பாருங்கள், அதே போல் வங்கதேசத்தைப் பாருங்கள், எனவே இது வலுவான ஒரு சவாலான உலகக்கோப்பை தொடராகும்” என்றார் ரவி சாஸ்திரி.
இந்திய அணி மே மாதம் 25-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராகவும் பிறகு 28ம் தேதி வங்கதேசத்துக்கு எதிராகவும் இரண்டு பயிற்சியாட்டங்களில் ஆடுகிறது.
உலகக்கோப்பை பிரதான முதல் ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும், 9ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 13ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராகவும் ஆடி பிறகு ஜூன் 16ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.