“டி20 உலககோப்பையில் விளையாடலாம் போனது, எனக்கு..” வருத்தத்துடன் பேசிய பும்ரா!

டி20 உலக கோப்பை தொடரில் விளையாடாதது வருத்தமளிக்கிறது என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா.

டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி செப்டம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் காயத்தில் இருந்து குணமடைந்து வந்த பும்ரா இடம்பெற்றிருந்தார். டி20 உலககோப்பைக்குக்கு  முன்னதாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா டி20 தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா டி20 தொடரில் விளையாடிய பும்ரா, துரதிஷ்டவசமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் விளையாடுவதற்கு முன்பாக காயம் ஏற்பட்டதால் அத்தொடரில் இருந்து விலகினார். பின்னர் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்று சந்தேகம் நிலவி வந்தது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பும்ராவால் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட முடியாது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதற்கான அறிக்கையையும் வெளியிடப்பட்டது.

இது பற்றிய முழு அறிக்கையை பிசிசிஐ வெளியிட்டு பும்ராவிற்கான மாற்று வீரர் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தது. டி20 உலக கோப்பையில் இருந்து விலகிய பிறகு ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பும்ரா பதிவிட்டு இருந்தார். அவர் கூறுகையில், “டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடாமல் போனது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனக்கு ஆறுதல் மற்றும் ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி. நான் விளையாடவில்லை என்றாலும் இந்திய அணிக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும். தொடர்ந்து இந்திய அணியை இடைவிடாமல் ஆதரித்து வருவேன். டி20 உலக கோப்பைக்கு வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருந்தார்.

Mohamed:

This website uses cookies.