இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவிற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
மேலும் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து நியூசிலாந்தில் நடக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முகமது சிராஜ் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். பும்ரா 4 போட்டிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 157 ஓவர்கள் வீசியுள்ளார். மேலும்1 7 என்ற சராசரியில் 21 வீழ்த்தியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
71 ஆண்டுக்கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஆஸி. மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றி கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாதனை படைத்துள்ளது. சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்டு டிராவில் முடிவடைந்தது.
ஆஸ்திரேலியாவில் கடந்த 2 மாதங்களாக நடடைபெற்று வரும் டெஸ்ட், டி20 தொடர்களில் இந்திய அணி பங்கேற்று ஆடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
உலகிலேயே சிறந்தது இந்திய வேகப்பந்து வீச்சு: ஆஸி. கேப்டன் பெய்ன்
இந்தியாவுக்கு இந்த வெற்றி உரியது. அங்கு சென்று ஆடும் போது, கடினமான சூழல் உள்ளதை நாங்களும் உணருவோம். வெளிநாட்டில் வந்து தொடரை கைப்பற்றுவதற்கு சிறந்த முயற்சி தேவை. அடிலெய்டில் வெல்ல வாய்ப்பு இருந்தது. அதை தவற விட்டோம். பெர்த்தில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் கடைசி 2 டெஸ்ட்களில் நாங்கள் சோபிக்கவில்லை. இந்த தொடரில் புதிய திறமை வாய்ந்த வீரர்கள் அடையாளம்ó கண்டுள்ளோம். உலகிலேயே தற்போது சிறந்த வேகப்பந்துவீச்சுக்கு எதிராக நாங்கள் ஆடினோம். ரன்களை குவியுங்கள் என்பதே எங்களுக்கு கிடைத்த செய்தி. கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. தற்போது மனச்சோர்வுடன் உள்ளோம். கண்டிப்பாக இலங்கையுடன் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவோம்.
நான் இடம் பெற்ற அணிகளில் இதுவே சிறந்தது: புஜாரா
இந்திய வீரர்களுக்கு உணர்ச்சிமயமான தருணம் இது. அயல்நாட்டு தொடரை வெல்ல நாங்கள் கடுமையாக பாடுபட்டோம். அதுவும் ஆஸி. மண்ணில் எளிதானதில்லை. அடிலெய்டில் அடித்த சதம் சிறப்பானது. இது தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
வேகம் மற்றும் பெளன்ஸை அனுமானித்து ஆட வேண்டும். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து சூழல்கள் வெவ்வேறானவை. கவுண்டி கிரிக்கெட்டும் எனக்கு மிகவும் உதவியது. நமது பெளலர்களுக்கு பாராட்டுகள். 20விக்கெட்டுகளையும் வீழ்த்துவது சிரமமானது. அடுத்த டெஸ்ட் தொடருக்கு 6 மாதங்கள்
உள்ளன. அதுவரை உள்ளூர் ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்துவேன். ஒரு நாள் அணியில் இடம் பெற தீவிரமாக முயல்வேன். எனது ஓரே முன்னுரிமை டெஸ்ட் ஆட்டம் தான்.