வீடியோ : டு ப்லெசிஸ் ஸ்டம்புகளை தெறிக்கவிட்ட பும்ரா

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பந்து வீச்சுக்கு அதிக அளவில் சாதகமாக இருந்த இந்த ஆடுகளத்தில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

விராட் கோலி (54), புஜாரா (50) ஆகியோரின் அரைசதத்தால் இந்தியா 187 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மோர்னே மோர்கல், பிலாண்டர், பெலுக்வாயோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்க 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 4 ரன்னுடனும், ரபாடா ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டீன் எல்கர் நேற்று எடுதுத்திருந்த 4 ரன்னிலேயே வெளியேறினார். அடுத்து அம்லா ரபாடாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்தியாவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. இதனால் அம்லா, ரபாடா திணறினார்கள். இருந்தாலும் பந்தை திறமையாக லீவ் செய்தனர். இதனால் தென்ஆப்பிரிக்கா விக்கெட் இழக்காத வண்ணம் பார்த்துக் கொண்டனர்.

ரபாடா 84 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் எடுத்தார். இது தென்ஆப்பிரிக்காவிற்கு மிகமிக முக்கியமானதாகும். அடுத்து அம்லா உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். டி வில்லியர்ஸ் 5 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த டு பிளிசிஸ் 8 ரன்னில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 107 ரன்னுக்குள் தென்ஆப்பிரிகா 5 விக்கெட்டுக்களை இழந்தது.

ஒரு பக்கம் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அம்லா நிலைத்து நின்று விளையாடினார். இதற்கு நடுவரின் கருணையும் முக்கிய காரணம்.

அம்லா 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 28-வது ஓவரை இசாந்த் சர்மா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை அம்லா எதிர்கொண்டார். அப்போது பந்து பேடில் பட்டது. இந்திய வீரர்கள் அப்பீல் செய்தனர். ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் இந்தியா ‘ரிவியூ’ வாய்ப்பை பயன்படுத்தியது. அப்போது பந்தை ‘பெய்ல்ஸ்’-ஐ தட்டிச்சென்றது. ஆனால் ‘அம்யர்ஸ் ஹால்’ என்பதால் நடுவர் விக்கெட் கொடுக்காததால் அவரது முடிவு எடுக்கப்பட்டது. இதனால் 18 ரன்னில் இருந்து தப்பினார்.

35-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை அம்லா ஆடமுடியாமல் பேடில் வாங்கினார். அப்போது இந்திய வீரர்கள் அப்பீல் கேட்டனர். அப்போதும் நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார். இந்திய ‘ரிவியூ’ ஆப்சனை பயன்படுத்தியது. அப்போது பந்து ஸ்டம்பின் மேற்பகுதியை தாக்கியது. இப்போது அம்யர்ஸ் ஹால் என்பதால் 33 ரன்னில் இருந்து தப்பினார். இரண்டு முறை நடுவரால் தப்பித்த அம்லா அரைசதம் அடித்தார்

Editor:

This website uses cookies.