பந்துவீச்சில் கெத்து காட்டும் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் !!

India's Vijay Shankar (centre) celebrates taking the wicket of Pakistan's Imam-ul-Haq during the ICC Cricket World Cup group stage match at Emirates Old Trafford, Manchester. (Photo by Martin Rickett/PA Images via Getty Images)

பந்துவீச்சில் கெத்து காட்டும் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் 

பும்ரா வீசிய 2வது ஓவரில் பேட்டால் பந்தை தொடவே பயந்தார் டி காக். அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. மீண்டும் 4வது ஓவரை வீசிய பும்ரா, ஆம்லாவை வீழ்த்தினார்

உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ், பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஆம்லா மற்றும் டி காக் களமிறங்கினர். தொடக்கம் முதலே தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை எளிதாக ரன் அடிக்கவிடாமல் புவனேஷும் பும்ராவும் கட்டுப்படுத்தினர்

பும்ரா வீசிய 2வது ஓவரில் பேட்டால் பந்தை தொடவே பயந்தார் டி காக். அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. மீண்டும் 4வது ஓவரை வீசிய பும்ரா, ஆம்லாவை வீழ்த்தினார். 6 ரன்களில் ஆம்லாவை வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பினார். அவுட்சைடு எட்ஜாகி சென்ற பந்தை ரோஹித் அருமையாக கேட்ச் பிடித்தார்

அதன்பின்னர் டி காக்குடன் கேப்டன் டுபிளெசிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றது. ஆனாலும் அந்த ஜோடி நிலைக்கவில்லை. 4வது ஓவரில் ஆம்லாவை தூக்கிய பும்ரா, தனது அடுத்த ஓவரில் டி காக்கை 10 ரன்களில் வீழ்த்தினார். பும்ராவின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர்.

Mohamed:

This website uses cookies.