பிக் பாஷ் டி20 லீக்: இங்கிலாந்து வீரர் பட்லர் சிட்னி தண்டர் அணியுடன் ஒப்பந்தம்

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன பட்லர், பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவதுபோல் ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான பிக் பாஷ் தொடர் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான பட்லர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடக்கூடியவர். தற்போது பட்லரை சிட்னி தண்டர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. சிட்னி தண்டர் அணிக்காக முதல் 6 போட்டிகளில் பட்லர் பங்கேற்கிறார்.

இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இதனால் பட்லர் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பட்லர் இதற்கு முன் 2013-14 சீசனில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.