நாங்கள் இன்னும் நிறைய போட்டிகளை இந்தியாவுடன் நடத்த தயாராக உள்ளோம்: ரவி சாஸ்திரியின் கோரிக்கைக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் பதில்

எந்த நாட்டிற்கு சென்றாலும் இன்னும் நிறைய பயிற்சி போட்டிகளில் விளையாட வேண்டும் அதற்காக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒத்துழைத்து ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி வேண்டுகோள் வைத்து இருந்தார்.

இந்நிலையில் இதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பதில் அளித்துள்ளது அதாவது நாங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் ரவிசாஸ்திரி இவ்வாறு தெளிவாகக் கூறியது எங்களுக்கு மகிழ்வாக உள்ளது. ஆனால் நாங்கள் இன்னும் இங்கே கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எந்த ஒரு கோரிக்கையும் பெறவில்லை. அப்படி பெற்றவுடன் இன்னும் பல போட்டிகளை இந்தியாவுடன் நடத்த தயாராக உள்ளோம் என்று கூறியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதும் கேள்வி கணைகள் பாய்ந்து வருகின்றன. அவர் பதவி விலக வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதனால் ரவிசாஸ்திரி பதில் அளிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

இந்த நிலையில் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்களில் விளையாட நாங்கள் தயங்க வில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு முன்னேற்றம் அடைந்து உள்ளோம். ஆனால் அதுபோன்ற ஆட்டம் முதல் டெஸ்டில் ஏன் இருக்கவில்லை என்பதை நினைக்க வேண்டும்.

பலம் குறைந்த அணிகளுக்கு எதிராக இரண்டு அல்லது மூன்று பயிற்சி ஆட்டங்கள் இருந்தாலும் அது பற்றி கவலை இல்லை. ஏனென்றால் அதுவும் போட்டிதான். ஆனால் போட்டி அட்டவணை கடினமான சூழ்நிலையில் இருக்கும் போது நாம் புரிந்து கொள்ளதான் வேண்டும். ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அதற்கு நேரம் இருக்கிறதா என்பது தான் கேள்வி.

டெஸ்ட் போட்டிக்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட விரும்புகிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடர் முடித்த பிறகு டெஸ்ட் போட்டிக்கு 10 நாட்கள் இடைவெளி இருக்கிறது. ஆனால் பயிற்சி ஆட்டங்கள் அட்டவணையில் இடம் பெறுவது எங்கள் கையில் இல்லை.

அணி நிர்வாகம் சார்பில் கிரிக்கெட் வாரியத்திடம் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் வைக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது என்றார். இந்திய அணி வருகிற நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட், 3 ஓரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்தியா 1-4 என இழந்தது. முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த டெஸ்டில் 20 வயதே ஆன சாம் குர்ரான் சிறப்பாக பந்து வீசியும், விக்கெட்டை கைப்பற்றியும் இந்திய தோல்விக்கு காரணமானார்.

சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இந்தியா 60 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த டெஸ்டிலும் முக்கியமான கட்டத்தில் ரன்கள் குவித்தும், விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியும் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.

இங்கிலாந்து அணிக்கான தொடர் நாயகன் விருதை பெற்ற சாம் குர்ரான், இங்கிலாந்து அணியை விட அதிக அளவில் எங்களை காயப்படுத்தி விட்டார் என்று ரவி ஷாஸ்திரி கூறியுள்ளார்.

Rajeshwaran Naveen: Cricket Fan - Dhoni Lover - CSK Forever

This website uses cookies.