மேற்கு வங்க அணியில் பிரக்யான் ஓஜா

மேற்கு வங்க அணியில் பிரக்யான் ஓஜா

முன்னாள் இந்திய அணியின் இடது கை சுழற்ப்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா சமீப காலமாக மேற்கு வங்க உள்ளூர் அணியில் கூட இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

தற்போது அவர் ஆருதல் அடையும் வண்ணம் ஓர் செய்தி வந்துள்ளது. அவர் மேற்க்கு வங்க ரஞ்சி கோப்பை அணியில் இடம் பிடிக்க வாய்ப்புகள் நெருங்கி வருகிரது.

அவர் தற்போது வரும் ரஞ்சி கோப்பை தொடரில் மேற்கு வங்க அணிக்காக விளையாடும் முதல் 35 வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்

முன்னதாக மேற்கு வங்க அணியில் இருந்து தனது சொந்த அணியாக ஹைதராபாத் அணிக்கு விளையாட விருப்பம் தெரிவித்து வந்தார்.

ஆனாலும், அவரது பெயரை மேற்குவங்க அணியின் முதல் 35 வீரர்களின் பட்டியலில் சேர்த்துள்ளது மேற்கு வங்க கிரிக்கெட் வாரியம்

அவர் இன்னும் தனது பெயரை பெற்றதற்காக என்ற கருத்தும் வெளியிடவில்லை வரும் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி ரஞ்சி கோப்பை தொடரில் இந்தியாவில் ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவர் இன்னமும் உள்ளூர் போட்டிகளில் பெரிதாக சாதிக்கவில்லை

 

இந்த அறிவிக்கப்பட்ட 35 வீரர்களில் பல பிரபலமான வீரர்களும் உள்ளனர் . மனோஜ் திவார், வ்ரித்திமான் சகா, அசோக் டிண்டா, முகமது சமி.

ஆனால் முகமது சைம் இந்த ரஞ்சி கோப்பை தொடரில் கலந்து கொள்லபோவது இல்லை என முன்னரே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அந்த 35 வீரர்கள் பட்டியல் :

மனோஜ் திவார், வ்ரித்திமான் சகா, அசோக் டிண்டா, முகமது சமி, ப்ரக்யான் ஓஜா,சுதீப் சட்டர்ஜி, ஷ்ரீவட்ஸ் கோ ஸ்வாமி, அபிமன்யு ஈஸ்வரன், அபிசேக் ராமன், கௌசிக் கோஷ், புராப் ஜோசி, அனுசப் மஜம்தார், பிரசன்ஜித் தாஸ், அக்னிவ் பான், பன்கஜ் ஷா, டெபோபிரியோ கோஷ், அபிசேக் மித்ரா, சௌரப் சிங், சயான் கோஷ், இசான் போரல், கனிஷ்க் சேத், அமித் குலியா, முகேஷ் குமார், அனந்தா ஷா, பிரித்தம் சக்ரவர்த்தி, அலோக் பிரதாப் சிங், சௌரவ் மண்டல், வ்ரித்திக் சட்டர்ஜி, பி அமித், சயான் சேகர் மொண்டல், பிரதிப்த்தா பிரமனிக், ஆமிர் கானி, அனுராக் திவாரி, அரிட்ரா சட்டர்ஜி, அமித் பானர்ஜி.

Editor:

This website uses cookies.