இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் : அரசிடம் கோரிக்கை

பாகிஸ்தானின் 19 வயதிற்க்கு உட்பட்டோருக்கான ஆண்கள் அணி இந்தியா வர உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளது இந்திட கிரிக்கெட் கட்டுப்பாட்டு வரியமான பிசிசிஐ.இந்த வருட இறுதியில் இந்தியாவில் நடக்க திட்டமிடப் பட்டுள்ள 19 வயதிற்க்கு உட்ப்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. அதற்க்காக அந்நாட்டு 19 வயதிற்க்கு உட்பட்ட ஆண்கள் அணி இந்தியா வருவதற்க்காக இந்திய உள்துறை அமிச்சகத்திடம் அனுமதி கோரி கோரிக்கை வைத்துள்ளது இந்திய கிரிக்கெர் கட்டுபாட்டு வாரியம் பிசிசிஐ.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயானகிரிக்கெட் தொடர்பான நட்புறவு கடந்த 10 வருடங்களாவே சுமூகமாக இல்லை என்பது குறிப்பித்தக்கது. தனியாக ஒரு முழு தொடரில் 2008ற்க்கு பின்னர் இந்திய ஒரே ஒரு தன் விளையாடியுள்ளது. 2013ல் இந்தியவில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியவிற்க்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடியது. அத்தொடரில் பாகிஸ்தான் அணியே 2-1 என்ற வெற்றிக்கணக்கில் தொடரை வென்றது.

அதன் பின்னர் பல்வேறு முறை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரு நாட்டு அணிகளும் மீண்டும் முழு அளவிளான ஒரு தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்திடம் மன்றாடி கேட்டு வருகிறது. அதற்க்கு சற்றும் செவி சாய்க்காத இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் பிசிசிஐ,

இந்திய அரசாங்கத்தை கைகாட்டி பாதுகாப்பு குறித்த சில காரணங்களுக்காக உங்களுடன் விளையாட பிசிசிஐ எங்களை அனுமதிக்கவிள்ளை என கூறி வருகிறது. இதனால் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்க்கு பெருத்த அளவில் வருமான இழப்பு ஏற்படுவதாகவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் குற்ற்ம் சாட்டி வருகிறது.

இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிக்கைக்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் கொடுத்த பேட்டியில் கூரியதாவது :

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் 19 வயதிற்க்குட்பட்டோர் அணி இந்த வருட இறுதியில் இந்தியாவில் நடக்கும் 19 வயதிற்க்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டியில் கலந்து கொண்டு விளையாட அனுமதி வேண்டி இந்திய உள்துறை அமைச்ச்கத்திடம் மனு அளித்துள்ளோம். மற்ற அணிகள் இந்தியாவில் வந்து விளையாடும் போது

இம்மாதிரியான அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டில் இருந்து ஒரு அணி வரும் போது அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் ஏற்ப்படுகிறது. ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரு தொடரில் அல்லது பல நாடுகள் கொண்ட ஒரு தொடரில் விளையாடாலமா என்ற தெளிவுத்தன்மை இல்லை. ஆகவே நாங்கள் இதில் தெளிவு பெற அனுமதி வேண்டி உள்துறை அமைச்ச்கத்திடம் விண்ணப்பித்துள்ள்ளோம்.

 

கடந்த வருடம் இந்தியாவில் நடந்த டி20 உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் அணி இந்தியா வர பாதுகாப்பு காரணங்களால் அனுமதி பெற்று இந்தியா வந்து தொடரில் கலந்து கொண்டடும் குறிப்பிடத்தக்கது. மேலும் , அத்தொடரில் இந்திய பாக்கிஸ்தான் போட்டி தர்மசாலாவில் நடக்க இருந்ததும் , அங்கு பாகிஸ்தான் அணி விளையாட கூடாது என சில அரசில்யல் சர்ச்சை எழுந்ததும் அதனால் அந்த போட்டி இறுதியில் கொல்கத்தா மைதானத்திற்க்கு மாற்றப்பட்டதும் மேலும் பல தெளிவின்மையை உருவக்கியுள்ளது.

வரும் காலங்களில் இது போன்ற சிறு சிறு காரணகளுக்காகவும் அரசின் காழ்ப்புணச்சிக்காகவும் கிரிக்கெட் போன்ற ஒரு சிறந்த விளையாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்க கிரிக்கெட் ரசிகர்களாகிய நாம் அனைவரும் வலியுருத்துவது நம் கடமையாகும்.

Editor:

This website uses cookies.