பிராட்மேன் மற்றும் பண்டிங்கின் பல வருட சாதனையை முறியடித்த கேப்டன் கோஹ்லி!!! சலாம் போட வைக்கும் சாதனை!!

ஒரு கேப்டனாக அதிக முறை ஒரு டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி பெரும் சாதனை புரிந்துள்ளார் தற்போது வரை கேப்டனாக 10 முறை ஒரே போட்டியில் 200 ரன்கள் எடுத்துள்ளார். இவற்றில் 7 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான்கள் ரிக்கி பாண்டிங் மட்டும் டான் பிராட்மேன் ஆகியோர் 6 முறை 200+ ரன்கள் அடித்து இருந்தனர். ஆனால் தற்போது 7 முறை வெற்றி பெறும் தருணத்தில் இருந்து 200+ ரன்கள் அடித்து உள்ளதால் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் கோலி அபாரமாக ஆடி 97 மற்றும் 103 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.  ஏற்கெனவே முதல் டெஸ்டில் 149, 51 ரன்கள் எடுத்ததால் முதலிடம் பெற்றிருந்த கோலி, லார்ட்ஸ் டெஸ்டில் சரிவர ஆடாத நிலையில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடம் பெற்றிருந்தார். தற்போது 937 புள்ளிகளுடன் விராட் கோலி மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றி உள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர்கள்: டான் பிராட்மேன் (961), ஸ்டீவன் ஸ்மித் (947), லென் ஹட்டன் (945), ஜேக் ஹாப்ஸ் (942), ரிக்கி பாண்டிங் (942), பீட்டர் மே (941), கேரி சோபர்ஸ், வால்காட், விவியன ரிச்சர்ட்ஸ், சங்ககரா (938). தற்போது கோலி 937 புள்ளிகளை எடுத்துள்ளார். புஜாரா 6, ரஹானே 19, தவன் 22 இடங்களிலும், ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 51-ஆவது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர் பட்டியலில் பாண்டியா 51-ஆவது இடத்திலும், ஜஸ்ப்ரீத் பும்ரா 37-ஆவது இடத்திலும் உள்ளனர்.  இங்கிலாந்து வீரர் பட்லர் 47-ஆவது இடத்துக்கும், அடில் ரஷீத் 116-ஆவது இடத்துக்கும் முன்னேறினர். பந்துவீச்சாளர்களில் கிறிஸ் வோக்ஸ் 31, அடில் ரஷீத் 47-ஆவது இடத்திலும் உள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 204 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 97, அஜிங்க்ய ரஹானே 81 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 38.2 ஓவர்களில் 161 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

62 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ், ஜாஸ்பட்லர் ஜோடி போராடியது. சுமார் 57 ஓவர்கள் தாக்குப்பிடித்து இந்த ஜோடி விளையாடியது.

ஒருவழியாக புதிய பந்தை கையில் எடுத்ததும் ஜஸ்பிரித் பும்ரா, ஜாஸ் பட்லரையும் (106), ஹர்திக் பாண்டியா தனது பங்குக்கு பென் ஸ்டோக்ஸையும் (62) வெளியேற்றினர். இதைத் தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோவ் (0), கிறிஸ் வோக்ஸ் (4), ஸ்டூவர்ட் பிராடு (20) ஆகியோரையும் பெவிலியனுக்கு திருப்பி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் பும்ரா.

கடைசி நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி மேற்கொண்டு 6 ரன்கள் சேர்த்த நிலையில் கடைசி விக்கெட்டை இழந்தது. ஆண்டர்சன் 11 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். முடிவில் இங்கிலாந்து அணி 104.5 ஓவர்களில் 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடில் ரஷித் 33 ரன்களுடன் நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

இந்திய அணி தரப்பில் பும்ரா 5, இஷாந்த் சர்மா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என பின்தங்கி உள்ளது. இரு இன்னிங்ஸிலும் சேர்த்து ஒரு சதம் உட்பட 200 ரன்கள் விளாசிய விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வானார். 4-வது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி சவுத்தாம்டன் நகரில் தொடங்குகிறது.

வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், “அனைத்திற்கும் முதலாக, நாங்கள் ஓர் அணியாக இந்த வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். அந்த மக்கள் பெரிய துயரத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், எங்களால் முடிந்தது வெற்றியை அவர்களுக்கு அர்ப்பணிப்பதே.

தொடரை நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி நாங்கள் நம்பவில்லை என்றால் இப்போது 1-2 என்று தொடர் ஆகியிருக்காது. எப்போதுமே முன்னேறிச்செல்லவும் வெற்றி பெறவும்தான் நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

Vignesh G:

This website uses cookies.