டெஸ்ட் கேப்டசின்ஷி எனக்கு வேண்டாம்ப்பா, நான் போயி என்னோட வேலையை பார்க்கிறேன்; தெறித்து ஓடும் இந்திய வீரர்!

கேப்டன் பொறுப்பு எல்லாம் எனக்கு வேண்டாம். நான் எனது பந்துவீச்சில் முழுகவனம் செலுத்துகிறேன் என்று தப்பி ஓடினார் ஜஸ்பிரித் பும்ரா.

இந்திய அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக கேப்டன் பொறுப்பில் இருந்து வந்த விராட் கோலி, டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து பிசிசிஐ இவரது ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை பறித்தது. இதன் காரணமாக பிசிசிஐ மீது விராட்கோலி அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில், தனது சமூக வலைத்தளத்தில் பதிவின் மூலம் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக விராட்கோலி அறிவித்தார். இந்திய அணி அடுத்த கேப்டனை இன்னும் தயார் செய்யாத நிலையில், விராட்கோலி இப்படி வெளியேறி இருப்பது இந்திய அணியின் எதிர்காலத்திற்கு பாதிப்பை கூட உண்டாக்கலாம் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரோகித் சர்மா அல்லது கே எல் ராகுல் இருவரில் ஒருவர் அடுத்த கேப்டனாக இருக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், ஒருநாள் போட்டிக்கான அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகித்து வரும் ஜஸ்பிரித் பும்ராவிடம், டெஸ்ட் போட்டியின் கேப்டன் பொறுப்பை கொடுத்தால் என்ன செய்வீர்கள்? என கேட்டபோது, சற்று கலக்கத்துடன் பதிலளித்தார். அவர் கூறுகையில்,

“நான் அப்படி ஒரு எண்ணத்திலேயே இல்லை. எனது கவனம் எல்லாம், அன்றைய நாளில் பந்துவீச்சை எப்படி செய்ய வேண்டும்?, எப்படி ரன்களை கட்டுப்படுத்த வேண்டும்? என்பது மட்டும்தான். எனது செயல்பாட்டை மட்டுமே நான் துரத்தி செல்கின்றேன். கேப்டன் பொறுப்பை அல்ல.

கேப்டன் பொறுப்பு எனக்கு கொடுக்கப்படும் நிலை வந்தால், அதைப் பற்றி நீண்ட ஆலோசனை செய்த பிறகே ஏற்பதா? இல்லையா? என முடிவு செய்வேன். இப்போது எதுவும் கூற இயலாது. நான் இன்னும் அந்த இடத்தில் போதுமான அனுபவத்தை பெறவில்லை. அணியின் பங்களிப்பிற்காக மட்டுமே என்ன செய்ய வேண்டும் என ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் நினைத்து பயிற்சி செய்கிறேன்.

கேப்டன் பொறுப்பு கிடைத்தால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அதற்காக எந்த அளவிற்கு அர்ப்பணிப்பு கொடுக்க வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆகையால் இப்போது எந்த எண்ணமும் இல்லை.” என்றார்.

ஜஸ்பிரித் பும்ரா கலகலப்பாக பேட்டி அளித்தாலும், கேப்டன் பொறுப்பை பற்றி கேட்டபோது கலக்கத்துடன் தான் பதிலளித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.