இந்தியாவின் மிக மோசமான பீல்டர் இவர்தான்: பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் பதில்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் சிறந்த ஃபீல்டர் யார் என்றும் மோசமான ஃபீல்டர் யார் என்றும் இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் விளக்கியுள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள அனைத்து போட்டிகளிலுமே இந்திய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருந்துள்ளது. இந்திய வீரர்கள் பந்துகளை பாய்ந்து பிடித்து சிறப்பாக ரன்களை சேமித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்.

இவர் இந்திய அணியின் ஃபீல்டிங் குறித்தும் இந்திய அணியில் சிறந்த ஃபீல்டர் குறித்தும் ஈஎஸ்பிஎன்கிரிக் இன்ஃபோவிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், “இந்திய அணியின் ஃபீல்டிங் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரிக்கு பிறகு வலுபடுத்தப்பட்டது. ஏனென்றால் 2017 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஃபீல்டிங் சுமாராக தான் இருந்தது. அந்தத் தொடரில் சில கேட்சுகள் தவரவிடப்பட்டன.

இதனையடுத்து இந்திய அணி வீரர்களின் உடற் தகுதியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் ஃபீல்டிங்கில் துடிப்பாக இருக்கும்படி பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக இரண்டு ரன்கள் எளிதில் எடுப்பதை தடுப்பது போன்ற பயிற்சிகளும் செய்யப்பட்டன. வீரர்கள் சரியான உடற்தகுதியுடன் இருந்தால் வேகமாக செயல்பட முடியும். அவ்வாறு வேகமாக செயல்பட்டால் ரன்களை எளிதில் தடுக்கமுடியும்.

BIRMINGHAM, ENGLAND – JUNE 04: Virat Kohli (C) of India celebrates as Ravindra Jadeja captures the wicket of Azhar Ali of Pakistan during the ICC Champions Trophy match between India and Pakistan at Edgbaston on June 4, 2017 in Birmingham, England. (Photo by Michael Steele/Getty Images)

இந்திய அணியில் தற்போதைக்கு சற்று மோசமான ஃபீல்டர் என்றால் அது சாஹல்தான். ஏனென்றால் அவருடைய கைககள் மிகவும் சிறியது. அத்துடன் அவரது கை விரல்களும் சிறியதாக இருப்பதால் அவரால் பந்தின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் சில கேட்சுகளை தவரவிடுகிறார். மற்றபடி அவர் ஒரு நல்ல ஆடுகளத்தில் வரும் பந்துகளை அவரை நன்றாகப் பிடிக்கிறார். அவருக்கு கேட்ச் பிடிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதில் அவர் நல்ல முன்னேற்றம் பெற்று வருகிறார்.

தற்போதைய இந்திய அணியில் சிறந்த ஃபீல்டர் கேப்டன் விராட் கோலிதான். அவருக்கு அடுத்த இடத்தில் மிகவும் அருகில் இருப்பவர் ரவிந்திர ஜடேஜா. இவர் கோலியைவிட குறைந்த போட்டிகள் விளையாடியிருந்தாலும் கடந்த ஆசியக் கோப்பை தொடரிலிருந்து, ஃபீல்டிங்கில் அவர் கோலிக்கு சிறந்த போட்டியாக இருந்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.