இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பாட புது உத்வேகத்துடனும், இரு புது விதமான யுக்திகளையும் கையாள உள்ளேன் எனவும், இது விராத் கோலிக்கு நன்றாக தெரியும் எனவும் கூறியுள்ளார்.
இந்திய அணியின் வலது கை சுழற்பந்துவீச்சாளரான சஹால் அயர்லாந்து அணிக்கெதிராக சிறப்பாக செயல்பட்டு இரண்டு போட்டிகளிலும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதற்காக தொடர் நாயகன் விருதும் பெற்றார்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி, தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இவர் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தினார். 127 ரன்களில் இங்கிலாந்து அணி சுருண்டது. மேலும், தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
சஹால் கூறியது..
“நான் கடினமாக பயிற்சி செய்துள்ளேன். நான் அவர்களுக்கு எதிராக இந்தியாவில் ஆடியுள்ளேன். ஆனால் இந்திய மைதானங்கள் வேறு, இங்கிலாந்து மைதானங்கள் வேறு. எப்போதும் என் மனதில் இருந்து அழிக்க முடியாத ஆட்டம் அது. அதேபோல் இங்கும் ஒரு ஆட்டத்தை பதிவு செய்வேன் நிச்சயம் என்றார்.
நான் இரு புது விதமான பந்துகளை கண்டுபிடித்துள்ளேன். அதை முதன்முறையாக இங்கிலாந்துடன் பரிசோதிப்பேன். இதை முன்னதாக கேப்டனுடன் ஆலோசித்தேன், எனக்கு முழுமனதுடன் சம்மதித்தார் எனவும் தெரிவித்தார்.
கடவுளின் கருணையால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். விரைவில் சிவப்பு பந்து ஆட்டத்தின் அணியிலும் இடம்பெற்று இதே போல் செயல்படுவேன் என உறுதிபட கூறினார்.