அடுத்த ஐபிஎல் சீசனில் இது வேண்டவே வேண்டாம்? பிசிசிஐ-க்கு ஐபிஎல் அணிகளின் வேண்டுகோள்!
கேப்டன் விராட் கோலியை ட்விட்டர் பக்கத்தில் செம்மையாக கலாய்த்துள்ளார் சுழல் பந்துவீச்சாளர் யூசுவேந்திர சஹால்.
ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கடந்த 2008ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் விராட் கோலி, 2013 ஆம் ஆண்டில் அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்று தற்போது வரை வழிநடத்தி வருகிறார்.
அதே பெங்களூரு அணியில் ஆடிவரும் இந்திய வீரர் யூசுவேந்திர சஹால் மிகவும் நகைச்சுவை உணர்வு மிக்கவர் என அனைவரும் அறிந்த ஒன்றே. அவர் அவ்வப்போது கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, தோனி போன்ற வீரர்களை மைதானத்தில் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்திருப்பதை நாம் கண்டிருப்போம்.
அதேபோன்று, அண்மையில் கேப்டன் விராட் கோஹ்லியையும் சஹால் கலாய்த்திருப்பது அனைவரையும் நகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
பெங்களூரு அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம், விராட் கோலியையும் அதனருகில் சிங்கத்தின் புகைப்படத்தையும் வைத்து ஒரு பதிவை போட்டிருந்தது. அதில் இவை இரண்டுக்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா? எனவும் கேள்வியை எழுப்பி இருந்தது.
இதற்கு பெங்களூரு அணியை சேர்ந்த சஹால் அனைவரையும் நகைக்க வைக்கும் விதமாக ஒரு கமெண்ட்டை அடித்திருந்தார். அதில் “இவை இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. விராட் கோலி ஆடை அணிந்து இருக்கிறார். ஆனால் சிங்கம் ஆடை எதுவும் அணியவில்லை.” என குறிப்பிட்டிருந்தார். இதைக்கண்ட ரசிகர்கள் பலர் கலகலவென சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இது ஒருபுறமிருக்க, பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டர் பக்கத்தில் தனது அணி வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கை தரும் விதமாக வீடியோ ஒன்றை பதிவிட்டு இம்முறை கோப்பையை வெல்வது குறித்து பேசியிருக்கிறார்.
2013ம் ஆண்டிலிருந்து பெங்களூரு அணிக்கு தலைமை தாங்கி வரும் விராட் கோலி ஒரு முறை கூட அந்த அணிக்கு கோப்பை பெற்றுத் தரவில்லை என்பதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இம்முறையும் அதே அதிருப்தி தொடரக் கூடாது என்ற நோக்கில் பெங்களூரு அணி காய் நகர்த்தி வருகிறது.