2வது டி20ல் ஒரு மாற்றம்.. பிளேயிங் லெவன் வெளியானது!

2வது டி20ல் ஒரு மாற்றம் செய்து, உத்தேச பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ளார் வாசிம் ஜாபர்.

இந்தியா-இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்திய அணி கடைசி ஓவர் வரை போராடி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. டி20 தொடரிலும் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது டி20 போட்டி 5ஆம் தேதி புனே மைதானத்தில் நடக்க உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர்.

கடந்த போட்டியின்போது வாம் ஜாபர் வெளியிட்ட கணிப்பில் வாஷிங்டன் சுந்தர் எடுக்கப்படவில்லை. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், போட்டியிலும் அவர் எடுக்கப்படவில்லை என்பதால் கணிப்பு சரியானது. சுந்தருக்கு பதிலாக சஹாலை ஜாபர் தேர்வு செய்திருந்ததும் சரியாக அமைந்தது.

முதல் டி20ல் சஹால் மோசமாக பந்துவீசினார். பீல்டிங்கிலும் கோட்டை விட்டார். இதை ஹர்திக் பாண்டியா விரும்பவில்லை என்பது போட்டியின் நடுவே அவர் கொடுத்த ரியாக்சனில் தெரிந்தது. இதனால் 2வது டி20ல் சஹல் இருப்பது சந்தேகம் என தெரிகிறது.

இந்நிலையில் 2வது டி20 போட்டிக்கும் பிளேயிங் லெவன் கணிப்பை வெளியிட்டுள்ளார் வாசிம் ஜாபர். அதில் யுஸ்வேந்திர சகலை வெளியேற்றாமல் அணியிலேயே வைத்துள்ளார். வாஷிங்டன் சுந்தரை இம்முறையும் எடுக்கவில்லை.

இதற்கு அவர் சொன்ன காரணம், “வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்தால் நல்ல பேலன்ஸ் கிடைக்கும். ஆனால் அதைவிட மிகவும் முக்கியம் ரிஸ்ட் ஸ்பின்னர்கள். ஆட்டத்தின் போக்கை மற்றக்கூடியவர்கள் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் என நான் நம்புகிறேன். ஒரு போட்டியில் மோசமாக செயல்பட்டுவிட்டார் என்பதற்காக உடனடியாக சஹால் வெளியேற்றப்படக்கூடாது என நம்புகிறேன்.

அதேசமயம், எனக்கு நன்றாகத் தெரியும் வாஷிங்டன் சுந்தர் பவர் பிளே ஓவர்களில் பந்துவீசக்கூடியவர். பேட்டிங்கில் மிகச்சிறந்த பங்களிப்பை கொடுக்க கூடியவர். ஆனாலும் மிடில் ஓவர்களில் சஹால் நிகழ்த்திக்காட்டியது போல வேறு எந்த சுழல் பந்துவீச்சாளர்களும் செய்ததில்லை. முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதனால் ஒரு போட்டியில் செய்த தவறுக்காக உடனடியாக வெளியேற்றமாட்டேன் என்றார்.

மேலும் பேசிய அவர், “அணியில் ஒரு மாற்றம் செய்ய வேண்டும். ஹர்ஷல் பட்டேல் மட்டும் இம்முறை ஆடமாட்டார். அர்சதீப் சிங் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார் என்றால், கட்டாயம் ஹர்ஷல் பட்டேலுக்கு பதிலாக உள்ளே எடுத்து வரப்பட வேண்டும். காரணம், புனே மைதானங்களில் இடது கை வேகப்பந்துவீச்சு நன்றாக எடுபடும்.” என்றார் வாசிம் ஜாபர்.

வாசிம் ஜாபர் தேர்வு செய்த, 2வது டி20ன் உத்தேச பிளேயிங் லெவன்:

1. சுப்மன் கில்
2. இஷான் கிஷன்
3. சூர்யகுமார் யாதவ்
4. சஞ்சு சாம்சன்
5. ஹர்திக் பாண்டியா
6. தீபக் ஹூடா
7. அக்சர் பட்டேல்
8. சிவம் மாவி
9. அர்ஷ்தீப் சிங்
10. யுஸ்வேந்திர சாஹல்
11. உம்ரான் மாலிக்

Mohamed:

This website uses cookies.