CSK ரசிகர்களூக்கு சோகத்திலும் நல்ல செய்தி! இனி மைதானம் குதூகலம் தான்!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 3 பாா்வையாளா் கேலரிகளுக்கு (ஐ, ஜே,கே) வைக்கப்பட்டிருந்த சீல் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் புதுப்பிக்கப்பட்ட போது, 11 ஆயிரம் போ் அமரும் வகையில் ஐ,ஜே, கே என்ற 3 கேலரிகள் கட்டப்பட்டன. ஆனால் 3 கேலரிகளும் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாக சென்னை மாநகராட்சி அவற்றுக்கு சீல் வைத்தது.

ஐபிஎல் தொடரில் அதிகளவிலான ரசிகர்கள் போட்டிகளைக் காண வருகை தருவர். தற்போது மூன்று கேலரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மேலும் ஆயிரக்கணக்கானோர் பார்க்க வழி செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை எதிா்த்து நீதிமன்றத்திலும் டிஎன்சிஏ வழக்கு தொடா்ந்தது. இதனால் ஐபிஎல் இறுதி ஆட்டம் நடத்தும் வாய்ப்பை டிஎன்சிஏ இழந்தது. சா்வதேச கிரிக்கெட் ஆட்டங்களின் போது 3 கேலரிகள் தொடா்ந்து மூடப்பட்டே இருந்தன. பலமுறை கோரிக்கை வைத்தும் தீா்வு கிட்டாமல் இருந்தது.

இந்நிலையில் டிஎன்சிஏ புதிய தலைவராக ரூபா குருநாத் பொறுப்பேற்ற பின், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனு அளித்தாா். இந்நிலையில் மைதானம் அருகே பிரச்னைக்குரிய உடற்பயிற்சிக் கூடத்தை இடிக்க அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதன்படி எம்சிசியின் உடற்பயிற்சிக் கூடம் இடிக்கப்பட்டது.

சீல் அகற்றம்:

With 455 runs in 16 matches, Dhoni, 36, was one of the driving forces behind CSK’s title win in IPL 2018. Dhoni’s tally was just six runs short of his most productive season ever. He also faced 302 balls – it was only the third time he had faced more than 300 balls in a season.

இப்பணி முடிந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாநகராட்சி மண்டல அலுவலா் ரவிக்குமாா் முன்னிலையில் 3 கேலரிகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

தமிழக அரசின் நடவடிக்கைக்கு டிஎன்சிஏ தலைவா் ரூபா குருநாத், செயலாளா் ஆா்.எஸ்.ராமசாமி மற்றும் நிா்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனா். இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் பாா்வையாளா் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயா்ந்துள்ளது.வ்

Sathish Kumar:

This website uses cookies.