சேப்பாக்கம் மைதானத்தில், மஞ்சல் நிற கேலரிகள் மூன்று காலியாக இருப்பது எதனால் எனத் தெரியுமா?

 

நேற்று இந்தியா-ஆஸ்திரேலியா இடையிளான போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதில் ஐ.ஜே.கே கேலரிகள் காலிகாக இருப்பதை படத்தில் கண்டிருக்கலாம்.

ஆனால், அந்த கேலரிகள் காலியாக இருக்க காரணம் என்ன தெரியுமா?

ஐ, ஜே, கே ஆகிய இந்த மூன்று கேலரிகளிலும் சுமார் 13 ஆயிரத்து 100 இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் மைதானம் சரிசெய்து கட்டப்பட்ட போது இந்த கேலரிகள் நிறுவப்பட்டன.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கூடுதலாக ஐ, ஜே, கே என்ற 3 பார்வையாளர்கள் கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்தது.

இந்த 3 கேலரிகளிலும் மொத்தம் 12 ஆயிரம் பேர் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை காணலாம்.

இந்த கேலரிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உரிய அரசு அமைப்புகளிடம் இருந்து முறையான அனுமதி எதுவும் பெறவில்லை என்பதால் சென்னை மாநகராட்சி 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.

இதனை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 கேலரிகளுக்கு சீல் வைத்ததை மாநகராட்சி உடனே அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

 

குறிப்பிட்ட 3 கேலரிகளையும் நாங்கள் இடிக்கத் தயார். சேப்பாக்கம் ஸ்டேடியம் பழமைவாய்ந்த கட்டிடமாகும்.

இதில் ஒரு பகுதியான பார்வையாளர் கேலரிகளை இடிக்க நேஷனல் ஹெரிடேஜ் கவுன்சில் போன்ற அமைப்புகளிடம் இருந்து அனுமதி பெறவேண்டும்.

இதற்கான காலஅவகாசம் தேவை. ஐ மற்றும் ஜே கேலரிகளில் எந்த வகையான விதிமீறல்களும் இடம்பெறவில்லை என்று இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

அந்த கேலரிகளை உரிய அனுமதியின்றி கட்டியிருப்பதால் இப்போது சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் சமரசம் செய்துகொள்ள வேண்டுமா? இதனை நீதிமன்றம் அனுமதிக்காது

சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 2013–ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு டோணி சென்னையில் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதால் ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண ஆவலுடன் மைதானத்துக்கு திரண்டனர்.

இந்நிலையில் ரசிகர்கள் பலர் கருப்பு சட்டை அணிந்து கொண்டு மைதானத்துக்கு சென்றனர்.

அவர்களுக்கு அனுமதி திடீரென மறுக்கப்பட்டது. மேலும் சில அருகே உள்ள கடைகளில் வேறு சட்டையை வாங்கி அணிந்து கொண்டு வருமாறும் வலியுறுத்தினர்.

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு மெரினாவில் கூட முடியாத நிலை ஏற்பட்டதால் கிரிக்கெட் போட்டியை பயன்படுத்திக் கொண்டு போராட்டம் நடந்துவிட்டால் என்ன செய்வது என்பதால் முன்னெச்சரிக்கையாக கருப்பு சட்டை அணிந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Editor:

This website uses cookies.