அஸ்வின் அதிரடி..! சேப்பாக்கை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்!

திண்டுக்கல்லில் நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இன்று இரவு திண்டுக்கல்லில் தொடங்கியது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி திண்டுக்கல் அணியின் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹரி நிஷாந்த் 1 ரன்னில் அவுட்டானார். ஜெகதீசன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய அஸ்வின் 19 பந்தில் 37 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அத்துடன் திண்டுக்கல்லின் ஸ்கோர் உயர்வில் தொய்வு ஏற்பட்டது.

இறுதியில், திண்டுக்கல் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேப்பாக் அணி சார்பில் அலெக்சாண்டர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. அந்த அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

முதல் பந்தில் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். ஐந்தாவது பந்தில் கோபிநாத் 4 ரன்னிலும், அடுத்த ஓவரில் கங்கா ஸ்ரீதர் ராஜு ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் 11 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

Tamil Nadu Premier League 2019: India off-spinner R Ashwin smashed 37 from just 19 balls after the Dindigul Dragons captain promoted himself in their season-opening win over Chepauk Super Gillies at the NPR College Ground on Friday.

அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆட தவறினர். ஆரிப் 16 ரன்னிலும், சசிதேவ் 13 ரன்னிலும், முருகன் அஷ்வின் 16 ரன்னிலும், சித்தார்த் 12 ரன்னிலும், ஹரிஷ்குமார் 15 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பில் சிலம்பரசன் 4 விக்கெட்டும், ஜகநாதன் கவுசிக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Sathish Kumar:

This website uses cookies.