இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரருக்கு கொரோனா உறுதி; ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சேத்தன் சவுஹானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்கு மாத காலமாக ஒட்டுமொத்த உலகையும் புரட்டி போட்டுள்ள கொரோனா என்னும் கொடிய நோய், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா தொற்று, கிட்டத்தட்ட 9 லட்சத்தை நெருங்கிவிட்டது.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும், வெளியூர்களுக்கு பயணம் செய்தவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட கொரோனோ தொற்று பாதிப்பு தற்பொழுது சமூக பரவலாகவே மாறிவிட்டதாக அறியப்படுகிறது. இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பக்சனின் ஒட்டுமொத்த குடும்பமே கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கும் நிலையில், தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சேத்தன் சவுஹனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரரும், உத்திரபிரதேசத்தின் விளையாட்டு துறை அமைச்சருமான சேத்தன் சவுஹானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட சேத்தன் சவுஹான் லக்னோவில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1969ம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமான சேத்தன் சவுஹான் 1981ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.