ரோகித் சர்மா நிரந்தரமாக இனி டி20 அணியில் இல்லை; ஹர்திக் பாண்டியாவுக்கு டி20 கேப்டன் பொறுப்பு கிடைத்தது இப்படி தான் – ரகசிய கேமரா இருப்பது தெரியாமல் உளறிய சேத்தன் சர்மா!

இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவிடம் ஜீ நியூஸ் நிறுவனம் ரகசிய ஆபரெஷன் நடத்தில் பிசிசிஐ ரகசியங்கள் பலவற்றை வெளியே கொண்டுவந்துள்ளது.

இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு அதிகாரியாக கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது முறை நியமிக்கப்பட்டார் சேத்தன் சர்மா. கடந்த முறை தேர்வுக்குழு தலைவராக இவர் செயல்பட்ட விதம் சரியாக இல்லை என்பதால் டி20 உலகக்கோப்பைக்கு பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஆனால் தகுதிகள் அடிப்படையில் தேர்வு செய்கிறோம் என்றுகூறி இரண்டாவது முறையாக தேர்வுகுழு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது சற்று அதிர்ச்சிகரமாகவே இருந்தது.

இந்த தேர்வுக்குப்பின் நிறைய ரகசியங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொண்ட ஜீ நியூஸ் நிறுவனம், சேத்தன் சர்மா மீது ரகசிய ஆபரேஷன் நடத்தியது. ரகசிய கேமராக்கள் வைத்து இவர் பேசுவதை ரெக்கார்ட் செய்தது. இதன் வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வெளியாகி பல்வேறு வெளிநாட்டு செய்தி நிறுவனங்களும் இதை எடுத்துப்பேசும் அளவிற்கு மிகப்பெரிய சிக்கலை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உண்டு செய்துள்ளது.

வெளியான வீடியோ காட்சியில், விராட் கோலி மீது கங்குலிக்கு இருந்த காழ்புணர்ச்சி, ரோகித் சர்மாவிற்கு எப்படி கேப்டன் பொறுப்பு சென்றது? வீரர்கள் முழு உடல் தகுதி இல்லாமல் இருந்தபோது, ஸ்டெராய்டு ஊசியை பயன்படுத்தி எப்படி மீண்டும் உடல் தகுதியை பெற்றுக் கொண்டார்கள்? போதைப்பொருள் தடுப்பு சோதனையிலும் மாட்டாதது எப்படி? டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது நிரந்தரமா? இல்லையா? ஹர்திக் பாண்டியாவிற்கு டி20 கேப்டன் பொறுப்பு சென்றது எப்படி? என்று பல்வேறு தகவல்களை சேத்தன் சர்மா பேசியது தெளிவாக பதிவாகியுள்ளது.

அதில் குறிப்பாக ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, உமேஷ் யாதவ் போன்ற இந்திய வீரர்கள் தங்களது எதிர்காலம் குறித்து பேசுவதற்கு எனது வீட்டிற்க்கே வருவார்கள். ஹர்திக் பாண்டியா கூடுதல் உரிமை எடுத்துக்கொண்டு எனது சோபாவில் படுத்துக்கொண்டு என்னிடம் பேசும் அளவிற்கு நெருக்கமானவர் என்று சேத்தன் சர்மா கூறியுள்ளார்.

மேலும் ரோகித் சர்மா இனி டி20 திட்டங்களில் இல்லை. நான் தான் ஷுப்மன் கில், சூர்யாகுமார் யாதவ், இசான் கிஷன், தீபக் ஹூடா மற்றும் சில 15-20 வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தேன்.” என்று பேசினார்.

இவை இரண்டையும் வைத்து பார்க்கையில், நெருக்கம் காரணமாகவே டி20 கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்திருக்கிறார் என்றும், சரியான தகுதி அடிப்படையில் கேப்டன் பொறுப்பு கிடைக்கவில்லை என்றும் தெளிவாக தெரிகிறது.

சேத்தன் சர்மா பணி நீக்கம் செய்யப்படுவரா? நடவடிக்கை பாயுமா? என்கிற கேள்விகள் அனைவரும் மத்தியிலும் இருக்கிறது. இதற்கு விடைகளை பி பிசிசிஐ மட்டுமே கொடுக்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Mohamed:

This website uses cookies.