டெஸ்டுக்காகவே பொறந்தவன்டா நானு… ஒரே இன்னிங்சில் 2 ரெக்கார்டை உடைத்து ஜாம்பவான்கள் பட்டியலில் இடம்பிடித்த புஜாரா!

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடியபோது, இரண்டு ரெக்கார்டுகள் படைத்துள்ளார் சித்தேஸ்வர் புஜாரா.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் அடித்தது. அதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

ரோகித் சர்மா(35) ஆட்டமிழந்த பின் களமிறங்கிய சித்தேஸ்வர் புஜாரா 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில்லுடன் இவர் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 113 ரன்களை சேர்த்தார். முதல் விக்கெட்டை இழந்தபிறகு இந்திய அணிக்கு இப்படியொரு பார்ட்னர்ஷிப் கிடைத்தது மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது.

நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் சித்தேஸ்வரர் புஜாரா 9 ரன்களை அடித்தபோது, பார்டர் கவாஸ்கர் டிராஃபியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2000 ரன்களை கடந்தார். பார்டர் கவாஸ்கர் டிராஃபியில் இந்த மைல்கல்லை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

முன்னதாக, ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், வி வி எஸ் லக்ஷ்மன், ராகுல் டிராவிட் ஆகியோர் இதனை செய்திருக்கின்றனர். தற்போது அந்த ஜாம்பவான்கள் பட்டியலில் புஜாரா இணைந்திருக்கிறார். இவருக்கு அடுத்ததாக விராட் கோலி 1793 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சித்தேஸ்வரர் புஜாரா இந்த சாதனையுடன் நிற்கவில்லை. இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ரன்களை டெஸ்ட் போட்டிகளில் கடந்திருக்கிறார். இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது இந்திய வீரராகவும் இருக்கிறார். இந்த பட்டியலிலும் சந்தேகத்திற்கு இடமின்றி சச்சின் டெண்டுல்கர், வி வி எஸ் லக்ஷ்மன் மற்றும் டிராவிட் ஆகிய 3 ஜாம்பவான்களும் இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றனர்.

2023 பார்டர் கவாஸ்கர் டிராஃபியில் புஜாரா செயல்பாடு..

சித்தேஸ்வர் புஜாராவிற்கு இந்தாண்டு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் சிறப்பாக துவங்கவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் மூன்று இன்னிங்ஸ் விளையாடி 7, 0, 31 ரன்கள் அடித்திருந்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஒரு ரன்னில் அவுட்டானார். இரண்டாவது இன்னிங்ஸில் இவர் ஒருவர் மட்டுமே இந்திய அணிக்கு நம்பிக்கையாகவும் திகழ்ந்து முக்கியமான கட்டத்தில் 59 ரன்கள் அடித்தார்.

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சுப்மன் கில் உடன் சேர்ந்து இவர் அமைத்த பார்ட்னர்ஷிப், முதல் இன்னிங்சில் 480 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா அணியை பின்தொடர்ந்து, பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு முக்கிய அடித்தளமாக அமைந்தது.

இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சித்தேஸ்வரர் புஜாரா, 7154 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 19 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அடங்கும்.

Mohamed:

This website uses cookies.