இந்திய ஒருநாள் அணியிலும் இடம்பிடிப்பேன்; புஜாரா நம்பிக்கை
ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளதாக புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்து வரும் புஜாரா, ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.
கடந்த 4 – 5 வருடங்களுக்கு மேலாகவே டெஸ்ட் தொடரில் புஜாரா மாஸ் காட்டி வந்தாலும், அவரால் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இடம்பிடிக்க முடியவில்லை. ஐ.பி.எல் போன்ற உள்ளூர் போட்டிகளில் கூட எந்த அணியும் புஜாரா கடந்த மூன்று வருடங்களாக வாங்க தயாராக இல்லை.
இந்த நிலையில், இந்திய ஒருநாள் அணியிலும் விரைவில் தான் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை தனக்கு அதிகமாக உள்ளதாக புஜாரா தெரிவித்துள்ளார்.
புஜாரா குறித்து கோஹ்லி பேசியதாவது;
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெற்ற வரலாற்று வெற்றியில் புஜாராவின் பங்கு குறித்து விராட் கோலி இந்திய கிரிக்கெட் வாரிய தொலைக்காட்சி பேட்டியளித்துள்ளார். அதில், “கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் ஒயிட் வால்கர் தான் புஜாரா. ஏனென்றால் அவரை கொல்ல நெருப்பு அல்லது சிறப்பு வாளால் மட்டுமே முடியும். அவரை எந்தப் பந்துவீச்சாளரோ அல்லது கிரிக்கெட் பந்தோ காயப்படுத்தி வீழ்த்த முடியாது” என்றார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்பது ஆங்கில திரைப்பட தொலைக்காட்சி ஒன்றில் வரும் தொடர் ஆகும். அதில் கதாபாத்திரமே ஒயிட் வால்கர் ஆகும்.
அத்துடன், புஜாரா தனது சொந்தத் திறமையால் சாதித்தவர். அவர்கள் போட்டிகளில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவது தொடர்பாக எந்தக் கேள்வியும் எழுப்பியதில்லை. அவர் கிரிக்கெட் நிர்வாகம் கூறும் கருத்துகளை புரிந்துகொண்டு, அதற்கேற்றபடி தன்னை தயார்படுத்திக்கொண்டு விளையாடுவார். இங்கிலாந்து விளையாடும் போது அவர் பெற்ற அறிவுரைகளை, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக திறம்பட வெளிக்கட்டினார். அவர் கூற விரும்பியதை பேட் மூலம் நிரூபித்துக் காட்டினார்” என கோலி கூறினார்.